AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவு”.. முதல்வர் விஜய்க்கு இபிஎஸ், உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

முதலமைச்சர் விஜய், தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தன் பக்கம் இழுக்கும் குதிரை பேர வேலைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையைத் தன்னிச்சையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட வைக்க முழு முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவு”.. முதல்வர் விஜய்க்கு இபிஎஸ், உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 29 May 2026 07:41 AM IST

சென்னை, மே 29: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் மற்றும் சீர்குலைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து எதிர்கட்சித் தலைவர் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தற்போதைய அரசில் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும், ஏன் காவல் துறையினருக்குமே பாதுகாப்பு இல்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைகள் குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

இதையும் படிக்க: சென்னை கோடம்பாக்கத்தில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை: தலைமை காவலர் கைது

அதிர்ச்சியூட்டும் குற்றச் சம்பவங்கள்:

சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் ஒருவருடன் சேர்த்து மூன்று பேர் கொண்ட கும்பல், சிறுவன் ஒருவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். இக்கொடூர குற்றவாளிளிடமிருந்து தப்பித்துக் கொள்ள, பாதிக்கப்பட்ட சிறுவன் பாதுகாப்பு தேடி காவல் நிலையத்திற்கே ஓட வேண்டிய அவல நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதோடு, சென்னை வேளச்சேரியில் காலை நேரத்தில் நடைப்பயிற்சி சென்ற 61 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரை, ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கும்பகோணத்தில் ஆளுங்கட்சியினரால் (தமிழக வெற்றிக் கழகத்தினர்) நடத்தப்பட்ட தடியடியில், பாதுகாப்புப் பணியில் இருந்த ஒரு காவல் துறை அதிகாரிக்குக் கை உடைந்து போனதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“கோட்-சூட்”, “சோபா மாடல்” ஆட்சி:

சென்னையில் சிறுவனுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம் குறித்து தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் நாள்தோறும் அரங்கேறும் குற்றச்செயல்கள் பொதுமக்களிடையே மிகுந்த அச்சமூட்டும் வகையில் உள்ளன” என்று தெரிவித்துள்ளார். மேலும், “தேர்தலின் போது எந்தக் குழந்தைகளை முன்னிறுத்தி, கைகளில் ஏந்தி வாக்கு சேகரித்தார்களோ, அந்தக் குழந்தைகளே இன்று தற்போதைய ஆட்சியில் பாதுகாப்பற்ற நிலையில் நடுரோட்டில் நிற்கிறார்கள்” என்று முதல்வர் விஜயை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்த அரசை “கோட்-சூட் மாடல் ஆட்சி” என்று விமர்சித்துள்ள அவர், விளம்பரப் பிரிய ஆட்சியை விடுத்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் காக்க முதலமைச்சர் உடனடியாக ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை:

இதேபோல் தமிழக அரசை “சோபா மாடல் ஆட்சி” என்று விமர்சித்துள்ள உதயநிதி ஸ்டாலின், இந்த ஆட்சியில் காவல்துறையினராலும் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை, அதே நேரத்தில் தவறு செய்யும் ஆளுங்கட்சியினரிடம் இருந்து போலீசாருக்குமே பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

முதலமைச்சர் விஜய், தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தன் பக்கம் இழுக்கும் குதிரை பேர வேலைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையைத் தன்னிச்சையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட வைக்க முழு முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் இத்தகைய பாலியல் குற்றங்களும், ஆளுங்கட்சியினரின் அராஜகங்களும் ஒட்டுமொத்த பொதுமக்களையும், சமூக ஆர்வலர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிக்க: வேளச்சேரியில் பயங்கரம்.. நடைப்பயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. இருவர் கைது!

Follow Us