AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

80வது சுதந்திர தினம்.. 3.29 மணி நேரம் தண்ணீரில் மிதந்து மாணவி புதிய சாதனை!

College Student Float On Water | இந்தியா இன்று (ஆகஸ்ட் 15, 2026) தனது 80வது சுதந்திர தின விழாவை கொண்டாடுகிறது. இந்த நிலையில், கிருஷ்ணகிரியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சுமார் 3.29 மணி நேரம் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்துள்ளார்.

80வது சுதந்திர தினம்.. 3.29 மணி நேரம் தண்ணீரில் மிதந்து மாணவி புதிய சாதனை!
தண்ணீரில் மிதந்த கல்லூரி மாணவி
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Aug 2026 07:14 AM IST

கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 15 : இந்தியா இன்று (ஆகஸ்ட் 15, 2026) தனது 80வது சுதந்திர தின (80th Independence Day) விழாவை கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுதந்திர தினத்திற்காக சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவி ஒருவர் சுமார் 3.29 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதிய சாதனை படைத்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

3 மணி நேரம் தண்ணீரில் மிதந்து அசத்திய மாணவி

கிருஷ்ணகிரி மாவட்டம், வெங்கடாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கே.ஏ நகரை சேர்ந்தவர் திவ்யபாரதி. நாமக்கலில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ரோபோடிக்ஸ் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் புதிய சாதனை செய்து அசத்தியுள்ளார். அதாவது, நீச்சல் குளத்தில் கையில் தேசிய கொடியை ஏந்தியபடி தொடரந்து சுமார் 3.29 மணி நேரம் மிதந்து அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : கோவை மாநகராட்சியில் 54 அரசு ஊழியர்கள் கூண்டோடு பணி நீக்கம்.. உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

கவனத்தை ஈர்த்த மாணவியின் சாதனை

காலை 8 மணிக்கு தேசிய கொடியுடன் நீச்சல் குளத்தில் மிதக்க தொடங்கிய மாணவி, 11.29 மணி நேரம் வரை நீரில் மிதந்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவி மேற்கொண்ட இந்த சாதனை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கல்லூரி மாணவிக்கு அவர் செய்த சாதனைக்காக வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

Follow Us