டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
2 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். . அப்போது அவருடன் தமிழகத்தின் வளர்ச்சி திடட்ங்கள் மற்றும் மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
2 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார். முன்னதாக புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அப்போது புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி ஆர்.ஜெயா ஆகியோர் முதல்வர் விஜய்யை மலர்க்கொத்து வழங்கி வரவேற்றனர்.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழக முதல்வர் விஜய் மே 27, 2026 அன்று சந்தித்தார். அப்போது அவருடன் தமிழகத்தின் வளர்ச்சி திடட்ங்கள் மற்றும் மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. பிரதமரை சந்தித்துள்ள முதல்வர் விஜய் மாலை 6.45 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், அவரைத் தொடர்ந்து மாலை 7.30 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




இதையும் படிக்க : ‘திருப்பத்தூர் தொகுதி ஒரு ஓட்டு விவகாரம்’.. முன்னாள் அமைச்சரின் அவசர மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக அரசின் நிதியால் கட்டப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கரையும் மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் விஜய்
#WATCH | Delhi: Tamil Nadu CM C. Joseph Vijay leaves from Seva Teerth after meeting Prime Minister Narendra Modi. pic.twitter.com/1oJ06YYBIw
— ANI (@ANI) May 27, 2026
இதனையடுதத்து மே 28, 2026 நாளை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு மீண்டும் சென்னை திரும்பவுள்ளார். முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு முதல்வர் விஜய் முதன்முறையாக டெல்லி சென்றுள்ளது மிகுந்த கவனம் ஈர்த்துள்ளது. \
இதையும் படிக்க : திருவாரூருக்கு ரூ.1,427 கோடியில் புறவழிச்சாலை திட்டம் – மத்திய அரசு – என்ன நன்மை?
முன்னதாக சரியாக 2 மாதங்களுக்கு முன் சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்ற விஜய், தற்போது முதல்வராக டெல்லி வந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது தமிழக முதல்வர் விஜய் சென்றுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.