மக்களே உஷார்.. புயல் சின்னம் வலுவிழந்தாலும் 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை.. வானிலை ஆய்வு மையம்!
Chennai Meteorological Centre : வங்கக் கடலில் நிலவி வந்த புயல் சின்னம் வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . அத்துடன், 15 மாவட்டங்களில் லேசானது முதல் கன மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது .
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுமா அல்லது வலுவிழக்குமா என்பதை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வந்தது. இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கேரள பகுதிகளில் வருகிற மே 26- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழுந்துள்ளது.
3.1 கிலோ மீட்டர் உயரத்துக்கு வளிமண்டல சுழற்சி
தற்போது குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிலோ மீட்டர் உயரத்துக்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேற்கு விதர்பா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 0.9 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து மன்னார் வளைகுடா வரை, மரத்வாடா, உள் கர்நாடகம், தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருகிறது. வடகிழக்கு தமிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிலோ மீட்டர் உயரத்துக்கு ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.




மேலும் படிக்க: அதிகரித்த டீசல் விலை.. ஆம்னி பேருந்து கட்டணம் உயர்கிறதா? சங்க தலைவர் அன்பழகன் விளக்கம்!
லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
Daily Weather Briefing (17.05.2026)
Heat wave to severe heat wave conditions likely to prevail over plains of northwest India and central India during many days of the week.
YouTube : https://t.co/IviEFvSCnz
Facebook : https://t.co/b5lMpirJhLFor more information, visit… pic.twitter.com/foCbTgKe2Z
— India Meteorological Department (@Indiametdept) May 17, 2026
இதன் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ( மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்). தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை, நாளை மறுநாள் மழை நிலவரம்
நாளை ( மே 18) கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, மதுரை, கரூர், திருச்சி, சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ( மே 19) கோவை, திருப்பூர் மாவட்ட மலை பகுதிகள், தேனி, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தென்காசி பழைய குற்றால அருவிக்கு போறீங்களா? வனத்துறை வெளியிட்ட அதிரடியான மகிழ்ச்சி செய்தி!