AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Rain Alert: இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை அப்டேட் இதோ..

Weather Update: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 20ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட ஓரிரு 2-4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

Rain Alert: இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை அப்டேட் இதோ..
கோப்பு புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 17 May 2026 06:33 AM IST

Tamilnadu Weather Update: தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், தென்மேற்கு பருவமழை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளிலும், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் நிகோபார் தீவுகளிலும், ஸ்ரீ விஜயபுரம் உட்பட அந்தமான் தீவுகளின் சில பகுதிகளிலும் நேற்று துவங்கியது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டம்?.. உருவாகும் ரகசிய நெட்வொர்க்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு..

இன்று கனமழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்று (மே 17) தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை மற்றும் நீலகிரி, சிவகங்கை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு:

இதனிடையே, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுரை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு:

தொடர்ந்து, நாளை (மே 18) தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

அதேபோல், வரும் 19ம் தேதி திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 20ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட ஓரிரு 2-4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

மேலும் படிக்க: வெள்ளைத் துணி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்.. தலைமைச் செயலகத்தில் புதிய மாற்றம்!

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

Follow Us