AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாளை தவெகவில் இணைகிறேன்… சி.விஜயபாஸ்கரைத் தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கரும் அறிவிப்பு

சி.விஜயபாஸ்கரைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தவெகவில் ஜூலை 2, 2026 நாளை தவெகவில் இணையவுள்ளதாக அறிவித்திருக்கிறார். என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர்வதை பகிர்வதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாளை தவெகவில் இணைகிறேன்…  சி.விஜயபாஸ்கரைத் தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கரும் அறிவிப்பு
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
Karthikeyan S
Karthikeyan S | Published: 01 Jul 2026 12:00 PM IST

சென்னை, ஜூலை 1 : சி.விஜயபாஸ்கரைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தவெகவில் ஜூலை 2, 2026 நாளை தவெகவில் இணையவுள்ளதாக அறிவித்திருக்கிறார். என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர்வதை பகிர்வதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணையும் விழா மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில் ஜூலை 02, ஜூலை, 2026 காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த தகவல் அதிமுகவினரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

சி.விஜயபாஸ்கரைத் தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைவதாக அறிவிப்பு

முன்னதாக அதிமுகவில் இருந்து விலகியது குறித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில், துகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏற்​பட்ட அத்​தனை நெருக்​கடி நேரங்​களி​லும் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பின்​னால் உறு​தியாக நின்​றேன்.கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்​சி​யில் என் மீது 43 பொய் வழக்​கு​கள் போடப் பட்​டன. இத்​தனை தியாகங்​களுக்​கும், நான் சுமந்த வேதனை​களுக்​கும் இன்று எனக்கு பரிசாக கிடைத்​திருப்​பது நெஞ்​சில் பாய்ந்த துரோக ஈட்டி மட்​டுமே என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : நாளை தவெகவில் இணைகிறேன், புதிய உத்வேகத்துடன்… – சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு

இத்​தனை ஆண்​டு​கள் நாம் யாரை எதிர்த்து யாருடைய மக்​கள் விரோத, அராஜக ஆட்​சியை வீழ்த்த இத்​தனை வழக்​கு​களை​யும், ரணங்​களை​யும் நம் உடம்​பில் ஏந்​தினோமோ, இன்று அதே தீய சக்​தி​களு​டன் கைகோத்​து, அவர்​கள் தயவுடன் ஆட்​சிக் கட்​டிலில் அமர தலைமை முற்​பட்​டதைக் கண்டு என் மனம் ரத்​தக் கண்​ணீர் வடிக்​கிறது. எம்​ஜிஆர், ஜெயலலி​தா​வின் அரசி​யல் வாரிசுகள் தீய சக்தி திமுக​வுடன் எப்​படி கைகோக்க முடி​யும்?

பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி முன்​மொழிந்த அந்த சமரச முடிவுக்​குத் தான் எதி​ராக நின்​றோமே தவிர, அவரது தலை​மைக்கு ஒரு​போதும் நாங்​கள் எதி​ராக நின்​ற​தில்​லை. பழனி​சாமியைத் தான் இந்த இயக்​கத்​தின் நிரந்தர பொதுச் செய​லா​ள​ராக நாங்​கள் உயிரைக் கொடுத்து முன்​னிறுத்​தினோம் ஆனால், எங்​களின் அத்​தனை எதிர்ப்​பு​களை​யும், தொண்​டர்​களின் தார்​மீக உணர்​வு​களை​யும் துச்​ச​மாக மதித்​து, அவர் எடுத்த அந்த தன்​னிச்​சை​யான முடிவு​தான் இன்று இந்த இயக்​கத்தை அழி​விலும், வேதனை​யிலும் நிறுத்​தி​யுள்​ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : திமுக மறுசீரமைப்புக்கு ஆலோசனை குழு அமைப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அதிமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தை ஜூலை 1, 2026 இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் இருவருக்கும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கிய பின்பும் இபிஎஸ் மீது உள்ள அதிருப்தியால் கூட்டத்தை புறக்கணித்து உள்ளனர்.

Follow Us