IND W vs PAK W: டி20 உலகக் கோப்பையில் எதிர்பார்ப்பை தூண்டும் இந்தியா – பாகிஸ்தான்.. எப்போது நடைபெறுகிறது?
IND W - PAK W: மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை, இந்த உலகக் கோப்பை 9 முறை நடத்தப்பட்டுள்ளது. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்தப் போட்டிகளில், இந்திய அணி ஆறிலும், பாகிஸ்தான் அணி இரண்டு முறையும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
மகளிர் டி20 உலகக் கோப்பையின் (ICC Womens Cricket World Cup 2026) 10வது பதிப்பு, தொடங்குவதற்கு முன்பே வரலாற்றுச் சிறப்புமிக்கதாகிவிட்டது. ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 12 நாடுகள் பங்கேற்பது 2026-ஆம் ஆண்டில்தான் முதல் முறையாக நிகழவுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நடத்தும் இந்த உலகக் கோப்பைத் தொடர், வருகின்ற 2026 ஜூன் 12ம் தேதி தொடங்கி 2026 ஜூலை 5ம் தேதி வரை மொத்தம் 33 போட்டிகளுடன் நடைபெறும். இதற்கிடையில், அனைவரின் பார்வையும் இந்தியா – பாகிஸ்தான் (IND W – PAK W) போட்டியின் மீது உள்ளது. ஆண்கள் அணியாக இருந்தாலும் சரி, பெண்கள் அணியாக இருந்தாலும் சரி, இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் ஒரு தனித்துவமான விறுவிறுப்பை அளிக்கின்றன. இந்தப் போட்டியானது வருகின்ற 2026 ஜூன் 14 ஆம் தேதி பர்மிங்காமில் நடைபெற உள்ளது. மேலும், இந்தியாவின் முழு உலகக் கோப்பை அட்டவணையை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: இதுதான் கடைசி உலகக் கோப்பையா? அடுக்கடுக்கான கேள்வி.. ஹர்மன் அசால்ட் பதில்!




இந்தியாவின் முழுமையான டி20 உலகக் கோப்பை அட்டவணை
𝗪𝗢𝗥𝗟𝗗 𝗖𝗨𝗣 𝗩𝗜𝗕𝗘𝗦 🏆🤌
12 captains, one epic photoshoot against the backdrop of London’s iconic Waterloo Bridge! 📸
Watch ICC Women’s #T20WorldCup 2026 Captains’ Carnival on JioHotstar! pic.twitter.com/S0t01RrSe0
— Star Sports (@StarSportsIndia) June 8, 2026
- 2026 ஜூன் 14 – இந்தியா – பாகிஸ்தான் (பர்மிங்ஹாம்)
- 2026 ஜூன் 17 – இந்தியா – நெதர்லாந்து (லீட்ஸ்)
- 2026 ஜூன் 21 – இந்தியா – தென்னாப்பிரிக்கா (மான்செஸ்டர்)
- 2026 ஜூன் 25 – இந்தியா – வங்கதேசம் (மான்செஸ்டர்)
- 2026 ஜூன் 28 – இந்தியா – ஆஸ்திரேலியா (லண்டன்)
இந்தியா – பாகிஸ்தான் நேருக்கு நேர்:
மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை, இந்த உலகக் கோப்பை 9 முறை நடத்தப்பட்டுள்ளது. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்தப் போட்டிகளில், இந்திய அணி ஆறிலும், பாகிஸ்தான் அணி இரண்டு முறையும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. 2024 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற்றபோது, இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
ALSO READ: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் அதிக விளம்பரம் ஏன்..? ஸ்மிருதி மந்தனா கேள்வி!
இதற்கிடையில், மகளிர் டி20 கிரிக்கெட்டின் வரலாற்றைப் பார்க்கும்போது, இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை 16 முறை மோதியுள்ளன. இங்கும் இந்தியா ஆதிக்கம் செலுத்தி, 16 போட்டிகளில் 13-ல் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம், பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவை 3 முறை மட்டுமே தோற்கடித்துள்ளது.