AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Womens T20 World Cup 2026: மகளிர் டி20 உலகக் கோப்பையில் பண மழை.. வெற்றி பெறும் அணிக்கு இவ்வளவு பரிசுத்தொகையா?

ICC Women's T20 World Cup 2026 Prize Money: 2026 மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு 23,40,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும். இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ. 65 கோடி (சுமார் $6.5 பில்லியன்) ஆகும். இது, ஐபிஎல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெற்ற பரிசுத் தொகையை விட 3 மடங்குக்கும் அதிகமாகும்.

Womens T20 World Cup 2026: மகளிர் டி20 உலகக் கோப்பையில் பண மழை.. வெற்றி பெறும் அணிக்கு இவ்வளவு பரிசுத்தொகையா?
மகளிர் டி20 உலகக் கோப்பை பரிசுத்தொகை
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Jun 2026 15:19 PM IST

மகளிர் டி20 உலகக் கோப்பையின் (ICC Womens T20 World Cup 2026) 10வது பதிப்பிற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. வருகின்ற 2026 ஜூன் 12 முதல் 2026 ஜூலை 5 வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இந்த மிகப்பெரிய போட்டியில், 12 அணிகளுக்கு இடையே 33 போட்டிகள் இடம்பெறும். பங்கேற்கும் 12 அணிகள் தலா 6 அணிகள் கொண்ட 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில், இந்தியாவும் பாகிஸ்தானும் (India vs Pakistan) குழு 1-ல் இடம்பெற்றுள்ளன. இந்தநிலையில், மகளிர் டி20 உலகக் கோப்பையில் வெற்றிபெறும் அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை என்பதை ஐசிசி தற்போது தெளிவுப்படுத்தியுள்ளது.

ALSO READ: முதல் போட்டியே பாகிஸ்தானுக்கு எதிராக.. டி20 உலகக் கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியின் அட்டவணை!

ஐசிசி அறிவிப்பு:


2026 மகளிர் டி20 உலகக் கோப்பையின் பரிசுத் தொகையின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் வகையில், இறுதிப்போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணி ரூ. 10 கோடி அதிகமாகப் பெறும். வரவிருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான சாதனைப் பரிசுத் தொகையாக 8,764,615 அமெரிக்க டாலர்களை ஐசிசி அறிவித்துள்ளது. இது முந்தைய பதிப்பை விட 10 சதவீதம் அதிகமாகும். இந்திய ரூபாயில், இது ரூ. 244 கோடிக்கு (சுமார் $1.44 பில்லியன்) சமமாகும்.

மகளிர் டி20 உலகக் கோப்பை சாம்பியன் அணிக்கான பரிசுத் தொகை

2026 மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு 23,40,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும். இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ. 65 கோடி (சுமார் $6.5 பில்லியன்) ஆகும். இது, ஐபிஎல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெற்ற பரிசுத் தொகையை விட 3 மடங்குக்கும் அதிகமாகும்.

இரண்டாம் இடம் பிடிப்பவருக்கும் பணமழை:

2026 மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் தோற்கும் அணி, அதாவது இரண்டாம் இடம் பிடிக்கும் அணி, 1,170,000 அமெரிக்க டாலர்களைப் பெறும். இந்தத் தொகை இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.32 கோடி ஆகும். இது ஐபிஎல் சாம்பியன்களின் பரிசுத் தொகையை விட ஏறக்குறைய ரூ. 12 கோடி அதிகம்.

ALSO READ: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் அதிக விளம்பரம் ஏன்..? ஸ்மிருதி மந்தனா கேள்வி!

அரையிறுதிக்குத் தகுதிபெறும் ஒவ்வொரு அணியும் 675,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 18.5 கோடி) பெறும். இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் மற்ற அணிகள் சுமார் ரூ. 7 கோடியை பெறும். மேலும், ஒவ்வொரு குழுப் போட்டி வெற்றிக்கும் அணிகள் 31,154 அமெரிக்க டாலர்களை (சுமார் 9 லட்சம் ரூபாய்) பெறும்.

Follow Us