Womens T20 World Cup: இதுதான் கடைசி உலகக் கோப்பையா? அடுக்கடுக்கான கேள்வி.. ஹர்மன் அசால்ட் பதில்!
Harmanpreet Kaur: 2025ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில், இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி பட்டத்தை வென்றது. இதன்மூலம், 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு வென்று கொடுத்த முதல் பெண் கேப்டன் என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார்.
ஐபிஎல் 2026 சீசன் அதிரடியாக நடந்து முடிந்த நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அடுத்ததாக ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் (Womens T20 World Cup 2026) இந்திய மகளிர் அணியின் போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஜூன் 7 ஆம் தேதி, டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் கேப்டன்களுக்கும் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. ஒவ்வொரு கேப்டனிடமும் ஒருவர் பின் ஒருவராக கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த சந்திப்பின் போது, 2026 டி20 உலகக் கோப்பைதான் தனது கடைசிப் போட்டியாக இருக்குமா என்று இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத்திடம் (Harmanpreet Kaur) ஒரு செய்தியாளர் கேட்டார். அப்போது, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பதிலடி கொடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஹர்மன்பிரீத் கவுர் வருத்தம்:
Reporter is bang on
Harmanpreet Kaur is a liability in this team
Even last odi wc she hardly played impactfull knocks— Keshava (@Keshav367212606) June 7, 2026
வருகின்ற 2026 ஜூன் 12 ம் தேதி தொடங்கும் 2026 மகளிர் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்துக் கேட்கப்பட்ட ஒரு கேள்வியால் மிகவும் வருத்தமடைந்தார். 2026 டி20 மகளிர் உலகக் கோப்பையில் கேப்டன்களுடனான போட்டோஷூட் நடைபெற்றது. அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, நிருபர் ஒருவர் ஹர்மன்பிரீத்திடம் அவரது ஓய்வு குறித்துக் கேள்வி கேட்டார். அதற்கு இந்திய அணியின் கேப்டன் அளித்த பதில், அந்த நிருபரை அடுத்த கேள்வி கேட்க முடியாமல் சென்றது.




2026 டி20 உலகக் கோப்பைதான் தனது கடைசிப் போட்டியாக இருக்குமா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது ஹர்மன்பிரீத், நான் ஓய்வு பெற வேண்டும் என விரும்புகிறீர்களா என்றார். அந்த நேரத்தில் செய்தியாளர், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நான் தெரிந்துகொள்ளத்தான் விரும்பினேன். இது உங்களுடைய கடைசி உலகக் கோப்பை அல்ல என்பதைக் கேட்பதில் எனக்கு மகிழ்ச்சி என்று சொல்ல, கடைசியாக ஹர்மன்பிரீத் கவுர், அப்படியென்றால் ஏன் இதைக் கேட்கிறீர்கள்? என்று பதிலடி கொடுத்தார்.
ALSO READ: மகளிர் டி20 உலகக் கோப்பை.. ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்.. விற்றுப்போன டிக்கெட்டுகள்!
ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி:
2025ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில், இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி பட்டத்தை வென்றது. இதன்மூலம், 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு வென்று கொடுத்த முதல் பெண் கேப்டன் என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார். ஹர்மன்பிரீத் தற்போது டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளார். தொடர்ச்சியாக 2 விதமான உலகக் கோப்பைகளை வென்று சாதனை படைக்க ஹர்மன் விரும்புகிறார். கேப்டனாக இது ஹர்மன்பிரீத் கவுரின் 5வது டி20 உலகக் கோப்பையாகும். 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி, வருகின்ற 2026 ஜூன் 14ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக தனது பயணத்தைத் தொடங்கும். இந்தப் போட்டி பர்மிங்காமில் நடைபெறும்.
ALSO READ: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் அதிக விளம்பரம் ஏன்..? ஸ்மிருதி மந்தனா கேள்வி!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இதுவரை டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை. இந்தத் தொடர் 2009 முதல் நடைபெற்று வருகிறது. மகளிர் டி20 உலகக் கோப்பை இதுவரை ஒன்பது முறை நடத்தப்பட்டுள்ளது. இது 10வது பதிப்பாகும்.