Cricket Records: அதிக போட்டிகள், ரன்கள், பவுண்டரிகள்.. கிரிக்கெட்டில் சச்சினின் முறியடிக்க முடியாத சாதனைகள்!
Sachin Tendulkar Unbreakable Records: கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் படைத்த சில முறியடிக்க முடியாத சாதனைகளை இந்த கட்டுரை அலசுகிறது. அதிக சர்வதேசப் போட்டிகள், பவுண்டரிகள், மற்றும் மொத்த ரன்கள் போன்ற அவரது பிரம்மாண்டமான சாதனைகள், நீண்ட கால கடின உழைப்பின் பலன். விராட் கோலி, ஜோ ரூட் போன்ற முன்னணி வீரர்களும் கூட இந்த மைல்கற்களை எட்டுவது பெரும் சவாலாகவே இருக்கும். சச்சினின் நிலைத்த ஆட்டத்திறனை இது எடுத்துக்காட்டுகிறது.
கிரிக்கெட்டில் பல சிறந்த வீரர்கள் தோன்றி, தங்கள் ஆட்டத்தின் மூலம் பெரும் புகழை அடைந்துள்ளனர். இதில், சச்சின் டெண்டுல்கர் சாதனையை யாராலும் மறக்கவும் முடியாது, முறியடிக்க முறியாது என்று நினைக்கப்பட்டது. இருப்பினும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர் என்ற சச்சின் சாதனையை விராட் கோலி முறியடித்தார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனை படைத்துள்ள சச்சினின் சாதனையை முறியடிக்க ஜோ ரூட்டுக்கு (Joe Root) வாய்ப்புள்ளது. இந்தநிலையில், அதிக சர்வதேசப் போட்டிகளில் விளையாடியது முதல் அதிக ரன்கள் எடுத்தது வரை அனைத்திலும் சச்சின் சாதனைகளைப் படைத்துள்ளார். விராட் கோலி (Virat Kohli) மற்றும் ஜோ ரூட் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் கூட, சச்சினின் முறியடிக்க முறியாத சாதனையை பற்றி தெரிந்துகொள்வோம்.
ALSO READ: கோலியால் தனியாக உலகக் கோப்பையை வெல்ல முடியாது: முன்னாள் வீரர் கொடுத்த எச்சரிக்கை
அதிக சர்வதேச போட்டிகள்:
அதிக சர்வதேசப் போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். சச்சின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 சர்வதேசப் போட்டி உட்பட மொத்தம் 664 போட்டிகளில் விளையாடியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது முதல் சர்வதேசப் போட்டியை 1989-ஆம் ஆண்டு விளையாடி, 2013-ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இவ்வளவு நீண்ட காலம் நாட்டிற்காக எந்தவொரு வீரரும் விளையாடியது கிடையாது. ஒரு வீரர் தனது உடற்தகுதியைப் பராமரித்து, தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும். சச்சின் இதை பல ஆண்டுகளாகச் செய்து, பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.




சர்வதேச கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகள்
சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 4340 பவுண்டரிகளை அடித்துள்ளார். இதில் 4076 பவுண்டரிகளும் 264 சிக்ஸர்களும் அடங்கும். சச்சின் பல ஸ்டேடியங்களில் பல்வேறு அணிகளுக்கு எதிராக ஷாட்களை அடித்து ரன்களைக் குவித்தார். நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடியதாலும், தொடர்ச்சியாக ரன்களைக் குவித்து சச்சின் இத்தகைய சாதனையை படைத்தார்.இப்போது, இந்த சாதனையை முறியடிக்க, ஒரு பேட்ஸ்மேன் பல ஆண்டுகளாக மிகச் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த சாதனையையும் சச்சின் தன்வசம் வைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 3 வடிவங்களிலும் சேர்த்து மொத்தம் 34,357 ரன்கள் எடுத்துள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 15,921, ஒருநாள் போட்டிகளில் 18,426 மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளில் 10 ரன்கள் அடங்கும். விராட் கோலியும் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து ரன்கள் குவித்து வருகிறார். மேலும், ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். இருப்பினும், சச்சினின் மொத்த ரன்களை எட்டுவதற்கு சச்சின் மற்றும் ஜோ ரூட்டுக்கு இன்னும் பல ரன்களை குவிக்க வேண்டும்.
சச்சினின் இந்த சாதனைகள் முறியடிக்கப்படுமா?
சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனைகளை எட்டுவது எந்தவொரு வீரருக்கும் ஒரு பெரும் சவாலாகும். அதற்கு நீண்ட காலம் விளையாடுவதும், தொடர்ச்சியாக ரன்கள் குவிப்பதும் அவசியம். இருப்பினும், கிரிக்கெட்டில் எந்தவொரு சாதனையையும் என்றென்றைக்குமாக முறியடிக்க முடியாததாகக் கருத முடியாது. தற்போது, இந்த 3 சாதனைகளிலும் சச்சின் டெண்டுல்கர் முன்னணியில் இருக்கிறார்.