AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

18 காரட் தங்கத்தை வாங்க தொடங்கிய இந்தியர்கள்.. காரணம் இதுதான்.. ஷாக் தகவல்!

Indians Consuming 18K Gold More In Recent Days | தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்வை சந்தித்து வரும் நிலையில், தற்போது கடும் உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை காரணமாக தற்போது இந்தியர்கள் 18 காரட் தங்கத்தை வாங்க தொடங்கியுள்ளனர்.

18 காரட் தங்கத்தை வாங்க தொடங்கிய இந்தியர்கள்.. காரணம் இதுதான்.. ஷாக் தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Oct 2026 18:40 PM IST

சமீப காலமாக இந்திய பொதுமக்கள் மத்தியில் 18 காரட் தங்கத்தின் (18 Karat Gold) மீதான நுகர்வு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பெல்லாம் இந்தியர்கள் 24 மற்றும் 22 காரட் தங்கத்தை (24 and 22 Karat Gold) மட்டுமே வாங்கி வந்த நிலையில், தற்போது தங்கம் விலை (Gold Price) உச்சத்தில் இருப்பதன் காரணமாக இந்த முடிவை கையில் எடுத்துள்ளனர். இந்த நிலையில், பொதுமக்கள் மத்தியில் 18 காரட் தங்கத்தின் நுகர்வு அதிகரித்துள்ளதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

22 காரட் தங்கத்தை அதிகம் வாங்கி வந்த இந்தியர்கள்

அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் 18 காரட், 14 காரட் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கிருக்கும் பொதுமக்களும் அவற்றை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்தியர்கள் மட்டும்தான் தங்கத்தின் தரத்தில் சமரசம் செய்துக்கொள்ளாதவர்கள். அவர்கள் 22 காரட் மற்றும் 24 காரட் தங்கத்தையே பெருமளவு வாங்குவர். இந்த நிலையில் தான், ஷாக் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : திருபாய் அம்பானி முதல் முகேஷ் அம்பானி வரை… இந்தியாவின் வளர்ச்சியில் அழியாத முத்திரையைப் பதித்த ரிலையன்ஸ்

ரூ.4,836-ல் இருந்து ரூ.13,590-க்கு உயர்ந்த தங்கம் விலை

2020, அக்டோபர் 14 ஆம் தேதி 1 கிராம் 22 காரட் தங்கம் வெறும் ரூ.4,836 ஆக இருந்தது. ஆனால், அதுவே இன்று (அக்டோபர் 14, 2026) ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.13,590 ஆக உள்ளது. அதாவது, ஆறு ஆண்டுகளில் தங்கம் விலை மூன்று மடங்கு உயர்வை சந்தித்துள்ளது. குறிப்பாக கடந்த 2 முதல் 3 ஆண்டுகள் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக பொதுமக்கள் இந்த முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : 8வது ஊதியக்குழு.. சம்பளத்தை ரூ.18,000-ல் இருந்து ரூ.69,000 ஆக உயர்த்த கோரிக்கை!

18 கார்ட் தங்கத்தை அதிகம் வாங்கும் பொதுமக்கள்

இது குறித்து டாடா குழுமத்தின் தனிஷ்க் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான அருண் நாராயண் கூறுகையில், 22 காரட் தங்க நகைகளை வாங்கும் இடத்தில் 18 காரட் தங்க நகைகளை வாங்கும்போது விலை சுமை மிகவும் குறைவாக இருப்பதன் காரணமாக, பெரும்பாலான பொதுமக்கள் 18 காரட் தங்கத்தை அதிகம் வாங்குகின்றனர் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us