AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IndvsSA : இந்திய அணியின் மிகப்பெரிய பலவீனம் இதுதான்… அஷ்வின் எச்சரிக்கை!

Ashwin Issues Warning For India : இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன என்று இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக இலக்கை துரத்த வேண்டிய நிலை வந்தால் இந்திய அதிக சிரமத்தை சந்திக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

IndvsSA : இந்திய அணியின் மிகப்பெரிய பலவீனம் இதுதான்… அஷ்வின் எச்சரிக்கை!
சூர்யகுமார் யாதவ் - எய்டன் மார்க்ரம் - ரவிச்சந்திரன் அஷ்வின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Feb 2026 17:23 PM IST

2026 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காமல் விளையாடி வரும் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன என்று இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக கடின பிட்ச்களில் இலக்கை துரத்த வேண்டிய நிலை வந்தால் இந்திய அதிக சிரமத்தை சந்திக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த யூடியூப் பேட்டியில், இந்திய அணியின் பந்து வீச்சு தற்போது உலக தரத்தில் இருப்பதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சேசிங் தான் இந்தியாவின் பலவீனமா?

தனது யூடியூப் சேனலில் பேசிய கிரிக்கெட் வீரர் அஷ்வின், பனி இல்லாத மைதானங்களில் மற்றும் பந்துகள் நன்றாக பிடிக்கும் பிட்ச்களில் இந்திய அணிக்கு பெரிய இலக்கை துரத்துவது மிகப்பெரும் சவாலாக இருக்கும். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணியின் பந்து வீச்சு அபாரமாக இருந்துள்ளது. ஆனால் பேட்டிங்கை பொறுத்த வரை நாம் எதிர்பார்த்த அளவில் இல்லை. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 74 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதே போல நெதர்லாந்து அணிக்கு நெருக்கடியான நிலையிலேயே வெற்றி பெற்றது. இது அணியின் குறைகளை வெளிப்படுத்துகிறது என்றார்.

இதையும் படிக்க : மழையால் அனைத்து சூப்பர்-8 போட்டிகளும் ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும்? ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

மேலும் பேசிய அவர் இந்திய அணியின் வேக மற்றும் சுழற்பந்து வீச்சு தாக்குதல் உலக தரத்தில் இருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் போட்டியைக் கட்டுப்படுத்தும் திறன் பந்துவீச்சாளர்களிடம் இருப்பதால் தான் தொடர்ந்து இந்தியாவால் வெற்றி பெற முடிந்துள்ளது. ஆனால் பேட்டிங் வரிசை இன்னும் சிறப்பா செயல்படவில்லை என்பது கவலையை அளிக்கிறது. குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அணிக்கு நிலையான தொடக்கத்தை வழங்காதது அணிக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : IndvsSA : வலைபயிற்சியின்போது பிரபல வீரர் காயம் – நாளை களமிறங்குவாரா? அதிர்ச்சி தகவல்

அபிஷேக் சர்மாவின் மோசமான ஃபார்ம்

இந்தத் தொடரில் அதிக எதிர்பார்ப்புடன் களமிறங்கிய அபிஷேக் சர்மா தொடர்ந்து மூன்று போட்டிகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டானது ஆச்சரியமான விஷயம். டி20 கிரிக்கெட்டில் முன்னணி பேட்ஸ்மேனாக கருதப்படும் ஒருவர் இப்படியான நிலையில் இருப்பது நம்பவே முடியாத ஒன்று. என்றார். இருப்பினும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்த சூழ்நிலையை பொறுமையாக கையாள்கிறார். தொடர்ந்து அபிஷேக் சர்மா மீது நம்பிக்கை வைத்திருப்பது அவரது நல்ல மனநிலையை காட்டுகிறது. வரவிருக்கும் போட்டிகளில் அபிஷேக் நிச்சயம் ஃபார்முக்கு திரும்புவார் என்றும் அவர் பேசினார்.