AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup Super-8: பாக்., – நியூசி., போட்டி.. இலங்கையில் மோசமான வானிலை.. போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?..

PAK vs NZ faces washout threat: இன்றைய ஆட்டத்தைப் பொறுத்தவரை, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்குமான போட்டி மழையால் ரத்தாகவோ அல்லது ஓவர்கள் குறைக்கப்படவோ வாய்ப்புள்ளது. ‘சூப்பர் 8’ சுற்றின் முதல் ஆட்டத்திலேயே வெற்றியைப் பெற வேண்டுமானால், இத்தகைய வானிலைக்கு ஏற்றவாறு பேட்டிங்கிலோ அல்லது பந்துவீச்சிலோ ஒரு வலுவான தொடக்கம் இரு அணிகளுக்கும் அவசியமானது.

T20 World Cup Super-8: பாக்., – நியூசி., போட்டி.. இலங்கையில் மோசமான வானிலை.. போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?..
இலங்கையில் மோசமான வானிலை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 21 Feb 2026 11:34 AM IST

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026-ன் (T20 World Cup 2026) லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக முடிவடைந்த நிலையில், லீக் சுற்றில் டாப்-2 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. கடும் போட்டி நிறைந்த ‘சூப்பர் 8’ சுற்றின் முதல் ஆட்டம், குரூப் ‘ஏ’ மற்றும் ‘டி’ பிரிவுகளில் இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து  (New Zealand Vs Pakistan) அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. அந்தவகையில், இலங்கையில் போட்டிகள் நடந்து வரும் 2 நகரிலும், வானிலை தொடக்கத்திலிருந்தே கவலையளிப்பதாக உள்ளது. இதனால், இலங்கையில் நடைபெற இருக்கும் 6 போட்டிகளைப் பற்றிய விவாதங்களிலும் வானிலை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

இதையும் படிக்க: ‘சூப்பர் 8’ சுற்றில் அதிரப்போகும் குரூப்-1.. இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்..

இன்று நியூசி., – பாக்., பலப்பரீட்சை:

அதன்படி, இன்றைய ஆட்டத்தைப் பொறுத்தவரை, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்குமான போட்டி மழையால் ரத்தாகவோ அல்லது ஓவர்கள் குறைக்கப்படவோ வாய்ப்புள்ளது. ‘சூப்பர் 8’ சுற்றின் முதல் ஆட்டத்திலேயே வெற்றியைப் பெற வேண்டுமானால், இத்தகைய வானிலைக்கு ஏற்றவாறு பேட்டிங்கிலோ அல்லது பந்துவீச்சிலோ ஒரு வலுவான தொடக்கம் இரு அணிகளுக்கும் அவசியமானது.

கொழும்பில் வெளுத்து வாங்கும் மழை:

அந்தவகையில், இன்றைய தினம் கொழும்பில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை நிலவரம் கூறுகிறது.

  • பிற்பகல் 1:00 முதல் 4:00 வரை (27°C): இடியுடன் கூடிய மழை பெய்ய 60% வாய்ப்பு உள்ளது.
  • மாலை 5:00 முதல் இரவு 7:00 வரை (26°C): அவ்வப்போது மழை பெய்யக்கூடும், மேகமூட்டத்துடன் காணப்படும் (55% மழை வாய்ப்பு).
  • இரவு 8:00 முதல் 11:00 வரை (25°C): லேசான மழை அல்லது தூறல் இருக்கக்கூடும் (65% மழை வாய்ப்பு).

ரிசர்வ் டே (Reserve Day) உண்டா?

ஐசிசி விதிகளின்படி, 2026 டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் ஒரு போட்டியின் போது மழை பெய்தால், ஓவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம். ஒரு அணி 20 ஓவர்களை முழுமையாக பேட்டிங் செய்து, மற்றொரு அணி பேட்டிங் செய்யும்போது மழை பெய்தால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி புதிய இலக்கு நிர்ணயிக்கப்படும்.

‘ரிசர்வ் டே’ கிடையாது. ஒருவேளை ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் ஒரு அணிக்கு குறைந்தபட்சம் 5 ஓவர்கள் கூட விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால், அந்தப் போட்டி கைவிடப்பட்டு ‘முடிவு இல்லை’ (No Result) என அறிவிக்கப்படும்.

இதையும் படிக்க : இந்த 2026 உலகக்கோப்பையின் ஸ்டாராக மாறிய ஷிவம் துபே – எப்படி தெரியுமா?

அப்படி போட்டி ரத்தானால், வெற்றிக்குக் கிடைக்க வேண்டிய 2 புள்ளிகளில் தலா 1 புள்ளியை மட்டும் இரு அணிகளும் பகிர்ந்து கொள்ள நேரிடும். இது சூப்பர் 8 சுற்றில் இரு அணிகளுக்கும் ஒரு முக்கியமான புள்ளியை இழப்பதாக அமையும்.