AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 WC 2026: ‘சூப்பர் 8’ சுற்றில் இன்று நியூசி., – பாக்., பலப்பரீட்சை.. இரு அணிகளின் பலமும், பலவீனமும்..

New Zealand Vs Pakistan, T20 World Cup 2026 Super 8: சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மல்லுக்கட்டும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சர்வதேச 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 49 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

T20 WC 2026: ‘சூப்பர் 8’ சுற்றில் இன்று நியூசி., – பாக்., பலப்பரீட்சை.. இரு அணிகளின் பலமும், பலவீனமும்..
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 21 Feb 2026 10:02 AM IST

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் (2026 T20 World Cup) 41வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் (New Zealand Vs Pakistan) அணிகள் இன்று (பிப்.21) பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னதாக, லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த அணிகள் ‘சூப்பர் 8’ (Super 8) சுற்றுக்கு முன்னேறின. சூப்பர் 8 சுற்றுக்கு வந்துள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1-ல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே அணியும், குரூப் 2-ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணியும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் அடிஎடுத்து வைக்கும்.

இதையும் படிக்க: ‘சூப்பர் 8’ சுற்றில் அதிரப்போகும் குரூப்-1.. இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்..

அந்தவகையில், சூப்பர் 8 சுற்று ஆட்டம் இன்று ஆரம்பமாகிறது. இதில் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (பிப்.21) நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொழும்பு, ஆர்.பிரேமதாசா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்ய இந்த வெற்றி இரு அணிகளுக்கும் மிக அவசியமானதாகும்.

நியூசிலாந்தின் பலம், பலவீனம்:

மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி லீக் சுற்றில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அரபு அமீரகத்தையும், 8 விக்கெட் வித்தியாசத்தில் கனடாவையும் வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றது. 6 புள்ளிகளுடன் அந்த அணி தனது பிரிவில் (டி) 2-வது இடம் பெற்றது.

நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் டாம் லேதம், பின் ஆலென் தவிர மற்றவர்கள் இன்னும் தங்களது சிறந்த நிலையை எட்டவில்லை. கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மார்க் சாப்மேன், டேரில் மிட்செல் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் மிடில் வரிசையில் நிலைத்து நிற்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, ஜேக்கப் டப்பி வலுசேர்க்கின்றனர். இவ்வாறு, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் நியூசிலாந்து சமபலத்துடன் காட்சியளிக்கிறது. நெருக்கடியான நேரங்களில் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்துவது அந்த அணியின் பலமாகும்.

பாகிஸ்தானின் பலம், பலவீனம்:

பாகிஸ்தான் அணி லீக்கில் 3 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தையும், 32 ரன் வித்தியாசத்தில் அமெரிக்காவையும், 102 ரன் வித்தியாசத்தில் நமீபியாவையும் தோற்கடித்தது. 3-வது ஆட்டத்தில் 61 ரன் வித்தியாசத்தில் இந்தியாவிடம் பணிந்தது. 6 புள்ளிகள் பெற்ற அந்த அணி தனது பிரிவில் (ஏ) 2-வது இடத்தை பிடித்தது.

பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் சஹிப்சதா பர்ஹான் (220 ரன்) அருமையாக ஆடி வருகிறார். அவருக்கு அடுத்தபடியாக ஷதப் கான் ஓரளவு கைகொடுக்கிறார். முன்னாள் கேப்டன் பாபர் அசாம், கேப்டன் சல்மான் ஆஹா உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது தேவையானதாகும். அந்த அணியின் பிரதான அஸ்திரமாக சுழற்பந்து வீச்சு விளங்குகிறது. இவ்வாறு, லீக் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உற்சாகத்துடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது. அந்த அணியின் சுழற்பந்து வீச்சு பலமாக உள்ளது; பேட்டிங்கில் டாப்-ஆர்டர் வரிசை நிலைத்து ஆடத் தொடங்கியுள்ளது.

அதிக ரன்கள் குவித்தவர்கள்:

பாகிஸ்தான் பேட்டிங்கில் பாபர் அசாம் முன்னிலை வகிக்கிறார். இவர் நியூசிலாந்துக்கு எதிராக 26 போட்டிகளில் விளையாடி, 41.90 என்ற சராசரியுடன் மொத்தம் 880 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 101* ரன்கள் இவரது அதிகபட்ச ஸ்கோராகும். நியூசிலாந்து அணியில் தற்போது விளையாடும் வீரர்களில் மார்க் சாப்மேன் அதிக ரன்களை எடுத்துள்ளார். இவர் 25 போட்டிகளில் விளையாடி, 41.43 சராசரியுடன் 663 ரன்களைப் பெற்றுள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 104* ஆகும்.

அதிக விக்கெட் எடுத்தவர்கள்:

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் ரவூப் முதலிடத்தில் உள்ளார். இந்த வேகப்பந்து வீச்சாளர் 20 போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணிக்கு வலுசேர்க்கிறார். நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை இஷ் சோதி சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இந்த லெக்-ஸ்பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக 33 போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ஆட்டம்:

சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மல்லுக்கட்டும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சர்வதேச 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 49 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பாகிஸ்தான் 24 ஆட்டங்களிலும், நியூசிலாந்து 23 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 2 ஆட்டங்கள் முடிவில்லாமல் போனது. 20 ஓவர் உலகக் கோப்பையில் 7 முறை சந்தித்ததில் பாகிஸ்தான் 5-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதையும் படிக்க: IND vs PAK: இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இரண்டாவது முறையாக மீண்டும் மோதுமா?.. இதோ முழு விவரம்!!

மழையால் ஆட்டம் பாதிக்க வாய்ப்பு?

கொழும்பில் இன்று மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.