IND vs SA Super 8: இந்திய அணியின் பிளேயிங் 11ல் அதரடி மாற்றம்?.. முக்கிய வீரருக்கு ஓய்வு?
India Predicted XI For Super 8 Against South Africa: தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தொடர்ந்து மூன்று போட்டிகளில் ரன் ஏதுமின்றி (Duck out) ஆட்டமிழந்தாலும், அவரது இடத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வாய்ப்பில்லை என சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் இன்று நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) சூப்பர் 8 சுற்றின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்காவை (India vs South Africa) எதிர்கொள்கிறது. கடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிக்கொண்ட இவ்விரு அணிகளுக்கும் இதுவே சூப்பர் 8ல் முதல் போட்டியாகும். குறிப்பாக இந்த சூப்பர் 8 போட்டியில், இந்திய அணியின் பிளேயிங் 11ல் (Playing XI) முக்கிய மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர், நட்சத்திர ஆல்-ரவுண்டர் அக்ஸர் படேலை மீண்டும் அணியில் சேர்க்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க: India vs South Africa: வெற்றியைத் தீர்மானிக்கப்போகும் இந்தியாவின் X Factor வீரர்கள்!!
அக்ஸர் படேல் சேர்ப்பு, வாஷிங்டன் சுந்தர் நீக்கம்?
இதன் காரணமாக, வாஷிங்டன் சுந்தர் அணியிலிருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நெதர்லாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட அக்ஸர் படேல், இந்தியாவின் டி20 கட்டமைப்பில் ஒரு முக்கிய வீரராகத் திகழ்கிறார். இந்தத் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அக்ஸர், இந்தியாவின் இரண்டாவது அதிகபட்ச விக்கெட் வேட்டைக்காரராகவும், 6.63 என்ற சிறந்த எகானமி ரேட்டையும் கொண்டுள்ளார்.
அபிஷேக் சர்மாவிற்கு தொடரும் ஆதரவு:
தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தொடர்ந்து மூன்று போட்டிகளில் ரன் ஏதுமின்றி (Duck out) ஆட்டமிழந்தாலும், அவரது இடத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படுவாரா? என்ற கேள்விக்கு, “அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து கவலைப்படுபவர்களை நினைத்து நான் கவலைப்படுகிறேன்” என்று கேப்டன் சூர்யகுமார் உறுதியுடன் பதிலளித்துள்ளார்.
குல்தீப் யாதவ்க்கு இடமில்லை:
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுவதால், இந்தியா 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் என்ற கூட்டணியைத் தொடர வாய்ப்புள்ளது. இதனால் குல்தீப் யாதவ் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. அதன்படி, வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே இடம்பெறுவர். சுழற்பந்து வீச்சாளர்களாக வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்ஸர் படேல் இடம்பெறுவர்.
இதையும் படிக்க: T20 WC Super 8: IND vs SA இன்றைய போட்டியில் திலக் வர்மா நீக்கப்படுகிறாரா? சூர்யகுமார் கொடுத்த விளக்கம்!!
இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்:
அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.