AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: விற்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்.. கோடிகளை கொட்டி வாங்கிய அமெரிக்க தொழிலதிபர்..!

Rajasthan Royals: ஐபிஎல் வரலாற்றில் முதல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புதிய உரிமையாளருக்கு கைமாறியுள்ளது. இந்திய - அமெரிக்க தொழிலதிபர் கல் சோமானியும் அவரது இந்த அணிக்காக அதிகபட்ச ஏலத்தொகையை சமர்ப்பித்திருந்தனர். தற்போது அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க தொழிலதிபர் கல் சோமானி தலைமையிலான கூட்டமைப்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 15,286 கோடிக்கு வாங்கியுள்ளது.

IPL 2026: விற்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்.. கோடிகளை கொட்டி வாங்கிய அமெரிக்க தொழிலதிபர்..!
ராஜஸ்தான் ராயல்ஸ்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 24 Mar 2026 17:26 PM IST

ஐபிஎல் (IPL 2026) வரலாற்றில் முதல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புதிய உரிமையாளருக்கு கைமாறியுள்ளது. இந்திய – அமெரிக்க தொழிலதிபர் கல் சோமானியும் அவரது இந்த அணிக்காக அதிகபட்ச ஏலத்தொகையை சமர்ப்பித்திருந்தனர். தற்போது அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க தொழிலதிபர் கல் சோமானி தலைமையிலான கூட்டமைப்பு ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 15,289 கோடிக்கு வாங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விற்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டு வந்தது. இந்தநிலையில், தற்போது ராஜஸ்தான் அணி இறுதியாக 1.63 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 15,289 கோடி ரூபாய் வாங்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய வர்த்தக தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: இங்க வராதீங்க – டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு பாகிஸ்தான் அமைப்பு மிரட்டல்

24 மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்:

2008 ராஜஸ்தான் ராயல்ஸ் கையகப்படுத்தப்பட்டபோது, ​​அதன் விலை வெறும் 67 மில்லியன் டாலர் மட்டுமே. அக்காலத்தில் அதன் மதிப்பு சுமார் ரூ. 260-270 கோடிக்குச் சமமாக இருந்தது. அந்த 67 மில்லியன் டாலரை இன்றைய மதிப்பில் கணக்கிட்டால், அது தோராயமாக ரூ. 628 கோடியாகும்.

தற்போது, ​​2026-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுமார் 1.63 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ. 15,289 கோடி) விற்கப்பட்டுள்ளது. இதன் பொருள், 2008-ல் இருந்த தற்போதைய மதிப்பான ரூ.628 கோடியுடன் ஒப்பிடும்போது, ​​ராஜஸ்தான் ராயல்ஸின் மதிப்பு சுமார் 24 மடங்கு அதிகரித்துள்ளது.

யார் இந்த கல் சோமானி..?

கல் சோமானி, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு உலகில் ஒரு முக்கியப் பிரமுகர் ஆவார். இவர் கல்வித் தொழில்நுட்பம், தரவு தனியுரிமை, செயற்கை நுண்ணறிவு ஆளுகை மற்றும் விளையாட்டுத் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பல உலகளாவிய நிறுவனங்களை உருவாக்கி, முன்னெடுத்து வருகிறது. இதன்மூலம், இந்த ஒப்பந்தம், விளையாட்டு உலகில் அவரது முதலீட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சோமானி 2021 முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முதலீட்டாளராக இருந்து வருகிறார். 2021ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தார். அப்போது சோமானி, “இந்த முதலீட்டில் நாங்கள் பெரும் ஆற்றலைக் காண்கிறோம். மேலும் ஐபிஎல்-இன் எதிர்காலம் குறித்து உற்சாகமாக இருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.

ALSO READ: வார்ம் அப் போட்டியில் அசத்திய விராட் கோலி – வெங்கேடஷ் ஐயர் டிம் டேவிட்டும் அபாரம் – வலுவான ஃபார்மில் ஆர்சிபி அணி

2 ஆண்டுகள் தடையை சந்தித்த ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஷேன் வார்னேவின் தலைமையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரை வென்றது. இருப்பினும், இதன் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2022ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியை இறுதிப்போட்டியில் சந்தித்து தோல்வியை சந்தித்தது. மேட்ச் பிக்ஸிங் காரணமாக ராஜஸ்தான் அணி 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளிலும் தடையை சந்தித்தது.

Follow Us