வார்ம் அப் போட்டியில் அசத்திய விராட் கோலி – வெங்கேடஷ் ஐயர் டிம் டேவிட்டும் அபாரம் – வலுவான ஃபார்மில் ஆர்சிபி அணி
Kohli Hits 241 Strike Rate: நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வார்ம் அப் போட்டியில் சிறப்பாக ஆடி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார். இந்த போட்டியில் அவரது ஸ்டிரைக் ரேட் 241 ஆக இருந்தது.
2026 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தீவிரமாக தயாராகி வருகிறது. அதற்கான ஒரு பகுதியாக நடைபெற்ற வார்ம் அப் பயிற்சி போட்டியில், இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி அதிரடியான ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
வார்ம் அப் போட்டியில் அசத்திய விராட் கோலி
பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி போட்டியில், கோலி வெறும் 12 பந்துகளில் 29 ரன்கள் குவித்து தனது பழைய ஃபார்ம் என்னவென்று ரசிகர்களுக்கு காட்டினார். இந்த போட்டியில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 241 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியை இரு அணிகளாக பிரித்து, குருணால் பாண்ட்யா மற்றும் வெங்கடேஷ் ஐயர் என 2 வீரர்கள் தலைமையில் விளையாடினர். இரு அணிகளின் பேட்ஸ்மேன்களும் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தினர்.




இதையும் படிக்க : IPL 2026: சஞ்சு, ஆயுஷ் தொடக்கம்.. மிடில் ஆர்டரில் தோனியின் மிரட்டல் அடி.. வலுவான சிஎஸ்கே பிளேயிங் லெவன்!
ஆர்சிபி அணி கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், இந்த ஆண்டும் கோப்பையை தக்க வைக்கும் நோக்கில் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த அணி மார்ச் 26, 2026 அன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக முதல் போட்டியில் களமிங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பயிற்சி ஆட்டத்தில் கலக்கிய ஆர்சிபி வீரர்கள்
𝗥𝗖𝗕’𝘀 𝗳𝗶𝗿𝘀𝘁 𝗪𝗮𝗿𝗺 𝗨𝗽 𝗚𝗮𝗺𝗲: 𝘈 𝘳𝘶𝘯-𝘧𝘦𝘴𝘵 𝘢𝘵 𝘵𝘩𝘦 𝘊𝘩𝘪𝘯𝘯𝘢𝘴𝘸𝘢𝘮𝘺 🤩❤️🔥
Jitesh, Rajat, Devdutt and KP amongst the runs, exciting cameos from Virat, Venky and TD, and some promising spells to sum up an exciting practice game. 🔥
Watch how it all… pic.twitter.com/SAaT2kPNox
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 23, 2026
இதற்கிடையில் இந்த வார்ம் அப் போட்டியில் ஜிதேஷ் சர்மா சிறப்பாக விளையாடி, 37 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 219க்கு அருகில் இருந்தது. இதனையடுத்து அவர் இந்த சீசனிலும் அவர் சிறந்த ஃபினிசராக செயல்படுவார் என்ற நம்பிக்கையை அளித்தது. அவருடன், டிம் டேவிட் 14 பந்துகளில் 36 ரன்களும் வெங்கடேஷ் ஐயர் 16 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இதையும் படிக்க : IPL 2026: சாதனைகளை படைக்கும் நோக்கில் சஞ்சு சாம்சன்.. ஐபிஎல் 2026 சாதகமாக அமையுமா?
வெங்கடேஷ் ஐயர் எந்த இடத்திலும் விளையாடும் திறன் கொண்டவர் என்பதால், அவருக்கான சரியான ரோலை ஆர்சிபி இன்னும் ஆராய்ந்து வருகிறது. பந்து வீச்சிலும் ஆர்சிபி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். புவனேஷ்வர் குமார், அபிநந்தன் சிங், மங்கேஷ் யாதவ் நன்றாக பந்து வீசி நம்பிக்கை அளித்தனர்.
இந்த வார்ம்அப் போட்டிக்குப் பிறகு பேசிய குருணால் பாண்ட்யா, இது நல்ல பயிற்சி போட்டியாக அமைந்தது. எல்லோரும் நன்றாக பேட்டிங் செய்தார்கள். கோலி ஆரம்பத்திலிருந்தே நல்ல ரிதமில் இருந்தார் என்றார். மொத்தத்தில், ஐபிஎல் 2026 தொடக்கத்திற்கு முன் ஆர்சிபி அணியின் இந்த வார்ம்அப் போட்டி, அணியின் பேட்டிங் வலிமையை வெளிப்படுத்தியதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கோலியின் அதிரடி ஃபார்ம், இந்த சீசனில் அணிக்கு பெரிய பலமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.