AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

India vs England Test Series 2025: கருண் நாயர் கிட்டத்தட்ட உறுதி.. சூசகமாக சொன்ன கவுதம் கம்பீர்..!

Karun Nair's Comeback Hopes: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் குறித்த செய்திகள். சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கருண் நாயரின் சிறப்பான ஃபார்ம் மற்றும் அனுபவம் கருதி அவரது தேர்வு குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கவுதம் கம்பீர் அளித்த சூசகமான பேச்சு கருண் நாயரின் தேர்வில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புதிய சுற்றுக்கு அடித்தளம் அமைக்கும்.

India vs England Test Series 2025: கருண் நாயர் கிட்டத்தட்ட உறுதி.. சூசகமாக சொன்ன கவுதம் கம்பீர்..!
கருண் நாயர் Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Jun 2025 22:39 PM IST

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி (India vs England Test Series) நேற்று அதாவது 2025 ஜூன் 8ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. வருகின்ற 2025 ஜூன் 20ம் தேதி இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த தொடருடன், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2025-2027ல் புதிய சுழற்சியின் தொடக்கமாகும். சமீபத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இல்லாமல் இந்தியா இந்த தொடரில் களமிறங்குவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் 11 குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் (Gautam Gambhir) சூசகமாக தெரிவித்திருந்தார்.

கருண் நாயருக்கு வாய்ப்பா..?

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, சுப்மன் கில் முன்னிலையில் மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கம்பீர் கூறியதாவது, “ஒருவர் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்தால், 1 -2 டெஸ்ட் போட்டிகளை வைத்து அவரை மதிப்பிடுவதில்லை. அதேநேரத்தில், கருண் நாயரின் அனுபவமும், ஃபார்மும் இங்கிலாந்தில் கைகொடுக்கும்.” என்றார்.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை இந்தியா லீட்ஸில் (ஹெடிங்லி) விளையாட உள்ளது. இந்திய அணியில் கருண் நாயரின் டெஸ்ட் கிரிக்கெட் பயணம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருந்தது. கடந்த 2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 303 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சில மாதங்களுக்கு அவரது புகழ் குறைய தொடங்கியது. 2017ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது செயல்திறன் ஏமாற்றத்தை கொடுத்தது. அந்த தொடரில் கருண் நாயர் 3 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 53 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதன்பிறகு, 2018ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணியில் இடம்பெற்றிருந்தாலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

சுப்மன் கில்:

இந்திய அணியில் இடம்பெறவில்லை என்றாலும், கருண்நாயர் தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த 2024-25 ரஞ்சி டிராபி உள்நாட்டு சீசனில் 863 ரன்கள் எடுத்திருந்தார். சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணிக்காக இரட்டை சதம் அடித்து, இந்திய அணியில் தனது இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்தார். கவுதம் கம்பீர், கருண் நாயர் குறித்து பேசியதால், வருகின்ற 2025 ஜூன் 20ம் தேதி லீட்ஸ் (ஹெடிங்லி) நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் இடம்பெறுவார் என கூறப்படுகிறது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 18 பேர் கொண்ட இந்திய அணி:

சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், ரிஷப் பண்ட் (துணை கேப்டன்/விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, கருண் நாயர், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஜேக்கப் பாதெல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜாக் க்ரோலி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங், கிறிஸ் வோக்ஸ்.

Follow Us