Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rinku Singh Priya Saroj Engagement: 300 பேர் மட்டுமே! முக்கிய தலைவர்கள் ஆசிர்வாதம்.. பிரமாண்டமாக நடந்த ரிங்கு சிங் – பிரியா சரோஜ் நிச்சயதார்த்தம்!

Rinku Singh Priya Saroj Wedding Date: இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜ் ஆகியோர் ஜூன் 8, 2025 அன்று லக்னோவில் 5-ஸ்டார் ஹோட்டலில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். நவம்பர் 18, 2025 அன்று வாரணாசியில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Rinku Singh Priya Saroj Engagement: 300 பேர் மட்டுமே! முக்கிய தலைவர்கள் ஆசிர்வாதம்.. பிரமாண்டமாக நடந்த ரிங்கு சிங் – பிரியா சரோஜ் நிச்சயதார்த்தம்!
ரிங்கு சிங் - பிரியா சரோஜ்Image Source: Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Published: 08 Jun 2025 20:21 PM

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குவும் (Rinku Singh), சமாஜ்வாதி கட்சி எம்பி பிரியா சரோஜ் (Priya Saroj) நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இன்று அதாவது 2025 ஜூன் 8ம் தேதி லக்னோவில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டல் செண்டமில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் மோதிரங்களை மாற்றிக்கொண்டனர். இந்த மோதிரம் மாற்றும் விழாவின் பல வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து, ரிங்கு சிங்குவும், பிரியா சரோஜும் நடனமாடிய வீடியோவும் ட்ரெண்டாகி வருகிறது.

திருமணம் எப்போது..?

ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியை தொடர்ந்து, இவர்களது திருமண தேதியும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, இருவரும் வருகின்ற 2025 நவம்பர் 18ம் தேதி வாரணாசியில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். இந்த நிச்சயதார்த்த விழாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் 300 சிறப்பு விருந்தினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர், அவர்களுக்கு பார்கோடி ஸ்கேனிங் மற்றும் சிறப்பு பாஸ்கள் வழங்கப்பட்டன. ப்ரைவேட் செக்யூரியுடன், ஹோட்டலுக்கு வெளியேயும், உள்ளேயும் காவல்துறையினரும் நிறுத்தப்பட்டிருந்தனர். மோதிர மாற்று விழாவின் போது, ​​ரிங்கு சிங் வெள்ளை நிற உடையிலும், பிரியா சரோஜ் அழகான இளஞ்சிவப்பு நிற உடையிலும் காணப்பட்டனர். பிரியா மேடையை அடைந்தவுடன், அவரது கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. இதன் பிறகு, இருவரும் கேமரா முன் சிரித்தபடி போஸ் கொடுத்தனர்.

நடனம்:

யார் யார் வந்திருந்தார்கள்..?

ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜி நிச்சயதார்த்த விழாவில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரவீன் குமார் மற்றும் பியூஷ் சாவ்லா, உ.பி. ரஞ்சி அணி கேப்டன் ஆர்யன் ஜுயல் உள்ளிட்ட பல பிரபல வீரர்களும் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு நிகழ்வில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் எம்.பி. டிம்பிள் யாதவ், ராம் கோபால் யாதவ், புஷ்பேந்திர சரோஜ் போன்ற முக்கியப் பெயர்கள் ஆகியோரை பிரியா சரோஜ் சிறப்பு விருந்தினராக அழைந்திருந்தனர். மேலும், சமாஜ்வாதி கட்சியின் பல மூத்த தலைவர்களும் எம்.பி.க்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.