Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Magnus Carlsen: குகேஷ் இன்னும் வளரணும்.. மேக்னஸ் கார்ல்சன் மறைமுக அட்வைஸ்!

மேக்னஸ் கார்ல்சன் நார்வே செஸ் போட்டியில் வெற்றி பெற்றார். இந்த தொடரில் இந்தியாவின் டி. குகேஷ் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். இதனிடையே கார்ல்சன், குகேஷ் போன்ற இளம் வீரர்களின் ஆதிக்கம் குறித்து மழுப்பலாகப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் இன்னும் தனக்கு நிகரான ஆதிக்கம் செலுத்த யாரும் இல்லை என கூறியுள்ளார்.

Magnus Carlsen: குகேஷ் இன்னும் வளரணும்.. மேக்னஸ் கார்ல்சன் மறைமுக அட்வைஸ்!
டி.குகேஷ் - மேக்னஸ் கார்ல்சன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 08 Jun 2025 12:09 PM

செஸ் போட்டியில் உங்களைப் போன்று ஆதிக்கம் செலுத்தக்கூடிய வீரர் யார் என்ற கேள்விக்கு உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சன் (Magnus Carlsen) மழுப்பலான பதிலளித்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான நார்வேயில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் நார்வே நாட்டைச் சேர்ந்த 5 முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். தமிழக வீரரும், இளம் கிராண்ட் மாஸ்டருமான டி.குகேஷ் உள்ளிட்ட 6 பேர் இந்த தொடரில் பங்கேற்றனர். ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். அந்த வகையில் 10 போட்டிகளில் மேக்னஸ் கார்ல்சன் சிறப்பாக விளையாடி பட்டம் வென்றார். இந்த செஸ் தொடரின் 6வது சுற்றில் டி.குகேஷிடம் மேக்னஸ் கார்ல்சன் தோல்வியடைந்தபோது அவர் காட்டிய ரியாக்‌ஷன் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்தைப் பெற்றது.

மேக்னஸ் கார்ல்சன் கொடுத்த பதில்

இந்த நிலையில் இந்த செஸ் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் இந்தியாவின் பெண் சதுரங்க நட்சத்திரமான டானியா சச்தேவ் உடன் மேக்னஸ் கார்ல்சன் உரையாடலில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் விளையாட்டில் உங்களைப் போன்று ஆதிக்கத்தை உருவாக்கக்கூடிய ஒரு வீரர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மேக்னஸ் கார்ல்சன், “சதுரங்க உலகில் டி குகேஷ் வளர்ச்சி பெரிதாக இருந்தாலும், தனக்கு நிகரான ஆதிக்கம் செலுத்தும் வகையில் வளரவில்லை” என்பதை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் பேசினார்.

மேலும் இளைய தலைமுறை வீரர்கள் இன்னும் தங்கள் விளையாட்டில் ஏராளமான குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றனர். ஒருமுறை ஒரு தலைமுறைக்கு தோன்றும் திறமைகள் மட்டுமே அந்த தலைமுறைக்கு வளர காரணமாக இருக்கும். குகேஷ் இந்த செஸ் போட்டியில் மட்டும் தான் சரியான பாதையில் செல்கிறார் என்று நான் நினைக்கிறேன். நாம் நினைத்தது போல் அவர் முன்னேறாமல் இருக்கலாம். 2008-2009ல் நான் இருந்ததைப் போலவே அவர் உள்ளார் என நான் நினைக்கிறேன்.

ஒரு ஆட்டத்தின் சிறந்த முடிவுகள் நிலையான ஆட்டத்தின் தரத்தால் மட்டுமல்ல போராடும் குணங்களாலும் வருகின்றன. என்னைப் பொறுத்தவரை இளம் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் குறைகள் உள்ளது. அவர்களின் வயதில் நிச்சயம் அது இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை மூத்த வீரர்கள் தான் சிறந்தவர்கள்” என கூறினார்.

வெற்றி வாய்ப்பை இழந்த டி.குகேஷ்

நார்வே செஸ் தொடரில் நூழிலையில் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இந்திய வீரரான டி.குகேஷ் இழந்தார் என சொல்லலாம். அவர் அமெரிக்கா வீரரான ஃபேபியோனா கருவானாவுடன் இறுதிச்சுற்றில் மோதினார். இதில் கார்ல்சனை வெல்ல வேண்டும் என்றால் அதிக புள்ளிகள் இருக்க வேண்டும் என எண்ணி செய்த சிறிய தவறு குகேஷின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதனால் அவர் மூன்றாமிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.