Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Steve Smith: ஷமியின் இந்த பந்தால் 3 மாதம் பேட்டிங் செய்யவில்லை.. உண்மையை உடைத்த ஸ்டீவ் ஸ்மித்!

Australia vs South Africa: ஐபிஎல் ஏலத்தில் ஸ்மித் புறக்கணிக்கப்பட்ட பின்னர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக அவர் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி வீசிய பந்தால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஸ்மித், மூன்று மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகி இருந்தார். லார்ட்ஸில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Steve Smith: ஷமியின் இந்த பந்தால் 3 மாதம் பேட்டிங் செய்யவில்லை.. உண்மையை உடைத்த ஸ்டீவ் ஸ்மித்!
முகமது ஷமி - ஸ்டீவ் ஸ்மித்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Jun 2025 14:49 PM

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC Final 2025) இறுதிப் போட்டியில் களமிறங்கத் தயாராகி வருகிறார். முன்னதாக, ஐபிஎல் 2025 ஏலத்தின்போது ஸ்மித்தை வாங்க எந்த அணியும் வாங்க முன் வரவில்லை. இதன் விளைவாக, ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் நீண்ட காலமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு தயாராகி வருகிறார். சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு பிறகு, ஆஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்கிய ஸ்மித், அதன்பிறகு ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிரான போட்டி ஸ்மித்தின் கடைசி ஒருநாள் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்பியன்ஸ் டிராபியில் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக விளையாடாததால் ஸ்மித் கேப்டனாகவும் பொறுப்பேற்றார். ஆனால் அந்த போட்டியில், முகமது ஷமி (Mohammed Shami) வீசிய ஒரு பந்து தன் மனநிலையை பாதித்ததாக தெரிவித்துள்ளார்.

சதம் அடிப்பார் என எதிர்பார்ப்பு:

2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் ஸ்டீவ் ஸ்மித் 96 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார். அதன்பிறகு, கடந்த 3 மாதங்களாக பேட்டிங் செய்யவில்லை என தெரிவித்துள்ளார். ESPN Cricinfo-க்கு அளித்த பேட்டியில் ஸ்டீவ் ஸ்மித், “பொதுவாக என் பேட்கள் வீட்டின் எல்லா இடங்களிலும் சிதறிக்கிடக்கும். அதை எடுத்துக்கொண்டு சிறிது சேடோ பேட்டிங் போன்றவற்றைச் செய்வேன். ஆனால் சிறிது காலம் கிரிக்கெட்டிலிருந்து முற்றிலும் விலகி இருக்க முடிவு செய்தேன்.

அதற்கு காரணம், 2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி எனக்கு எதிராக ஒரு ஃபுல் டாஸ் பந்தை வீசினார். அப்போது, அந்த பந்தை என்னால் சிறப்பாக அடிக்க முடியும் என்று நம்பினேன். ஆனால் அன்று ஃபுல் டாஸ் பந்தை அடிக்க முயற்சித்து நான் அவுட் ஆவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. அதன் பிறகு, நான் எந்த போட்டி போட்டியிலும் விளையாடவில்லை. நான் பேட்டை கூட எடுக்கவில்லை. நான் ஒரு நெட் செஷன் கூட செய்யவில்லை. ஆனால் இப்போது நான் மனதளவில் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். இப்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் மீண்டும் என்னால் முடிந்ததை சிறந்ததைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று ஷமியின் பந்து குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.

முகமது ஷமி:

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக லார்ட்ஸில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையில் ஸ்மித் முக்கிய இடம் வகிக்கிறார். லார்ட்ஸில் ஸ்மித்தின் சாதனையும் மிகவும் சிறப்பாகவே உள்ளது. ஸ்மித் இதுவரை 58.33 சராசரியில் 2 சதங்கள் மற்றும் 2 அரை சதங்கள் உள்பட 525 ரன்கள் எடுத்துள்ளார். அதன்படி, ஒரு குறிப்பிட்ட ஸ்டேடியத்தில் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் டான் பிராட்மேன் 551 ரன்களுடனும், வாரன் பார்ட்ஸ்லி 551 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 525 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்திற்கு முன்னேற ஸ்மித்துக்கு வாய்ப்புள்ளது. ஸ்மித் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 2 சதங்கள் மற்றும் 2 அரைசதங்கள் உள்பட 854 ரன்கள் எடுத்துள்ளார்.