AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஷிவம் துபே அதிரடி… நெதர்லாந்துக்கு எதிராக 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

T20 Worldcup 2026 : நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 17ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இறுதி வரை போராடிய நெதர்லாந்து அணியால் இந்திய அணி நிர்ணயித்த இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஷிவம் துபே அதிரடி… நெதர்லாந்துக்கு எதிராக 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
இந்திய அணி அசத்தல் வெற்றி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Feb 2026 23:08 PM IST

நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில், இந்திய அணி முதலில் களமிறங்கி 193 ரன்கள் குவித்தது. தொடக்கத்தில் சிறிய இடைவேளைகளில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா இந்த ஆட்டத்திலும் டக் அவுட்டானார். மேலும் தொடர்ந்து 3 போட்டிகளிலும் டக் அவுட்டாகி மோசமான சாதனையை அவர் படைத்தார். இந்த நிலையில் இந்திய அணியை சிக்சர் துபே என ரசிகர்களால் அழைக்கப்படும் ஷிவம் துபே அணியை சரிவில் இருந்து மீட்டார். ஹர்திக் பாண்ட்யாவுடன் இணைந்த அவர் 5வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

ஹர்திக் பாண்ட்யா வரலாற்று சாதனை

இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 193 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நேரத்தில் 6000 ரன்களும் 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளும் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெற்றார்.  இந்த போட்டிக்கு முன் 6000 ரன்களை எட்ட 22 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், நெதர்லாந்துக்கு எதிராக 21 பந்துகளில் 30 ரன்கள் அடித்து அந்த மைல்கல்லை எட்டினார். தற்போது அவரது டி20 கணக்கில் 6008 ரன்கள் மற்றும் 221 விக்கெட்டுகள் உள்ளன.

இதையும் படிக்க : BBL: சென்னையில் பிபிஎல்.. புது திட்டம் போடும் ஆஸ்திரேலியா.. காரணம் என்ன?

இதனையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி நெதர்லாந்து அணியில் மைக்கேல் லெவிட் மற்றும் மேக்ஸ் ஓ’டவுட் ஆகிய தொடக்க வீரர்கள் அந்த அணி நல்ல துவக்கம் தந்தனர். பின்னர் வந்த பாஸ்ட டி லிடே 33 ரன்களும், சாக் லயன் காசேட் 26 ரன்களும எடுத்து சிறிய இடைவேளைகளில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதற்கு அடுத்து களமிறங்கிய நோவா குரோஸ் தன் பங்குக்கு ரன்கள் எடுத்தார். இறுதி வரை போராடிய நெதர்லாந்து அணியால் இந்திய அணி நிர்ணயித்த இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனையடுத்து இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

இதையும் படிக்க : Imran Khan: ஒரு கண்ணில் 15% பார்வை.. சிறையில் மோசமான நிலையில் இம்ரான் கான்! கபில்தேவ், கவாஸ்கர் மேற்கொண்ட முயற்சி!

பந்து வீச்சிலும் அசத்திய ஷிவம் துபே

இந்திய அணியின் சார்பில் அசத்தலாக பந்து வீசிய வருண் சக்கரவர்த்தி 3 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். பேட்டிங்கில் அசத்திய ஷிவம் துபே பந்துவீச்சிலும் கலக்கினார். நெதர்லாந்து அணியின் 2 முக்கிய விக்கெட்டுகளையும் எடுத்தார். மேலும் ஐஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ந்து 12 வது வெற்றியை பதிவு செய்தது. ஏற்கனவே சூப்பர் 8 போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி லீக் போட்டியை தோல்வியின்றி முடித்துள்ளது.