Imran Khan: ஒரு கண்ணில் 15% பார்வை.. சிறையில் மோசமான நிலையில் இம்ரான் கான்! கபில்தேவ், கவாஸ்கர் மேற்கொண்ட முயற்சி!
Imran Khan Health Update: சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டனும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது. இதையடுத்து, சிறையில் இம்ரான் கானுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பிற்கு 14 முன்னாள் கேப்டன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) இந்தியா – பாகிஸ்தான் (India vs Pakistan) இடையிலான போட்டியின்போது இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்கிகொள்ளவில்லை. தொடர்ந்து, போட்டிக்கு பிறகு இருநாட்டு கிரிக்கெட் வீரர்களும் கைகுலுக்கி கொள்ளவில்லை. இப்படி ஒருபுறம் நடக்க, மறுபுறம் இந்தியா – பாகிஸ்தான் எல்லை தாண்டிய ஒற்றுமையை அற்புதமாக வெளிப்படுத்தும் விதமாக முன்னாள் இந்திய அணியின் கேப்டன்களான கபில் தேவ் மற்றும் சுனில் கவாஸ்கர் உட்பட பல புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் கேப்டன்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் கானை மனிதாபிமானத்துடன் நடத்துமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திடம் முறையான வேண்டுகோள் விடுத்துள்ளனர். 14 பேர் கொண்ட முன்னாள் கேப்டன்கள் குழு, பாகிஸ்தான் கேப்டனும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கானை ஜெயிலுக்குள் மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ALSO READ: பாண்ட்யாவுடன் வாக்குவாதம்! சூர்யாவிடம் இருந்து விலகல்.. குல்தீப் யாதவுக்கு என்ன பிரச்சனை?




என்ன நடந்தது..?
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டனும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது. இதையடுத்து, சிறையில் இம்ரான் கானுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பிற்கு 14 முன்னாள் கேப்டன்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இம்ரான் கான் 800 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ள நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. சிறையில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து முறையான விவரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. சில நாட்களுக்கு முன்பு, இம்ரான் கானின் வலது கண்ணில் 15 சதவீத பார்வை மட்டுமே உள்ளது என்று ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார். 3 மாதங்களாக அதிகாரிகள் தனது புகார்களை நிவர்த்தி செய்ய எதுவும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
14 முன்னாள் கேப்டன்கள் கையெழுத்து:
14 Former International Cricket Captains, including Padma Bhushan Sunil Gavaskar, Padma Bhushan Kapil Dev, Greg Chappell, Stephen Waugh, write to the Government of Pakistan regarding the reported condition of Imran Khan, former Prime Minister and former Captain of the Pakistan… pic.twitter.com/X0gmL2nE28
— ANI (@ANI) February 17, 2026
இதையடுத்து, பெலிண்டா கிளார்க், கிரெக் சேப்பல், மைக்கேல் அதர்டன், சுனில் கவாஸ்கர், கபில் தேவ், நாசர் உசேன், இயன் சேப்பல், மைக்கேல் பிரேர்லி, ஆலன் பார்டர், டேவிட் கோவர், கிம் ஹியூஸ், கிளைவ் லாயிட், ஸ்டீவ் வா மற்றும் ஜான் ரைட் ஆகியோர் கையெழுத்திட்டு கடிதம் எழுதியுள்ளனர்.
ALSO READ: மருமகன் மீதும் விமர்சனம்.. பாகிஸ்தான் தோல்வியால் கடுப்பான ஷாஹித் அஃப்ரிடி!
அந்தக் கடிதத்தில், “நமது தேசிய கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்களாக கையெழுத்திட்ட நாங்கள், பாகிஸ்தானின் புகழ்பெற்ற முன்னாள் கேப்டனும் உலக கிரிக்கெட்டின் சிறந்த வீரருமான இம்ரான் கானின் கூறப்படும் சிகிச்சை மற்றும் சிறை நிலைமைகள் குறித்து ஆழ்ந்த கவலையுடன் எழுதுகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.” என்று தெரிவித்திருந்தனர்.