AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

India vs Pakistan: பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்குவாரா சூர்யா..? வெளியான முக்கிய அப்டேட்!

India vs Pakistan Handshake Controversy: பாகிஸ்தானுடனான இந்திய அணி கைகுலுக்க கூடாது என்ற கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், டாஸின் போதும் போட்டிக்கு பிறகும் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்கமாட்டார் என்றும் தெரிகிறது. கடந்த 2025ம் ஆண்டும் ஏப்ரல் 22ம் தேதி இந்தியாவின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து 2025 ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் கைகுலுக்கவில்லை.

India vs Pakistan: பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்குவாரா சூர்யா..? வெளியான முக்கிய அப்டேட்!
இந்தியா - பாகிஸ்தான் கைகுலுக்கல் சர்ச்சைImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Feb 2026 18:18 PM IST

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் 2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) இந்தியா – பாகிஸ்தான் (India vs Pakistan) இடையிலான போட்டி இன்னும் ஒரு மணிநேரத்தில் நடைபெறவுள்ளது. கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும் போட்டிக்கு முன்பு, டாஸ் போடப்படும். டாஸ் நேரத்தின்போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில், இதுதொடர்பான முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

ALSO READ: உலகக் கோப்பையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு! இந்த வீரர் இல்லாமல் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி!

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தியின்படி, கொழும்பில் இன்று அதாவது 2026 பிப்ரவரி 15ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகலுக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசுகையில், “இந்திய வீரர்களுடன் கைகுலுக்குவதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்று தெரிவித்தார்.

பாகிஸ்தானுடனான இந்திய அணி கைகுலுக்க கூடாது என்ற கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், டாஸின் போதும் போட்டிக்கு பிறகும் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்கமாட்டார் என்றும் தெரிகிறது. கடந்த 2025ம் ஆண்டும் ஏப்ரல் 22ம் தேதி இந்தியாவின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து 2025 ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் கைகுலுக்கவில்லை. அதன் பின்னர், சர்வதேச போட்டிகளின்போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவில்லை.

கைகுலுக்கல் சர்ச்சை குறித்து சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன..?

பாகிஸ்தானுக்கு எதிரான மோதலுக்கு முன்பு கைகுலுக்கல் சர்ச்சை குறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கேட்டபோது, பதிலளித்த அவர், “ 24 மணி நேரம் காத்திருங்கள். இதில், ஏன் இவ்வளவு கவனம் செலுத்துகிறீர்கள்? நாங்கள் கிரிக்கெட் விளையாட வந்துள்ளோம். நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடுவோம். நாளை அந்த முடிவுகளையெல்லாம் பரிசீலிப்போம். ” என்று தெரிவித்தார்.

ALSO READ: வெயிலா? மழையா? கொழும்பில் தற்போது வெதர் எப்படி..? லேட்டஸ்ட் வானிலை ரிப்போர்ட்!

கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாசாவில் இந்தியாவின் சாதனை எப்படி..?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்த ஸ்டேடியம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று அறியப்படுகிறது. இந்தியா இதுவரை கொழும்பில் 15 டி20 போட்டிகளில் விளையாடி, 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 4ல் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.

Follow Us