Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

India vs Pakistan: வெயிலா? மழையா? கொழும்பில் தற்போது வெதர் எப்படி..? லேட்டஸ்ட் வானிலை ரிப்போர்ட்!

Colambo Weather Report: கொழும்பில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி கனமழை பெய்யவில்லை. வானம் மேகமூட்டமாக இருந்தாலும், அவ்வப்போது வெயில் இருக்கும். போட்டிக்கு முன்பு மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.இதனால் டாஸ் போடும் நேரமான மாலை 6:30 மணிக்கு டாஸ் தாமதமாகலாம். இருப்பினும், போட்டியின் போது இரவு 7 மணி மற்றும் அதற்குப் பிறகு மழை பெய்யும் வாய்ப்புகள் குறைவே என்று கூறப்படுகிறது.

India vs Pakistan: வெயிலா? மழையா? கொழும்பில் தற்போது வெதர் எப்படி..? லேட்டஸ்ட் வானிலை ரிப்போர்ட்!
கொழும்பு வானிலை நிலவரம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Feb 2026 15:24 PM IST

2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) மிகவும் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய போட்டிகளில் ஒன்றான இந்தியா vs பாகிஸ்தான் (India vs Pakistan) போட்டியின் போது மழை பெய்யும் அபாயம் உள்ளது. இந்த போட்டியானது கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் மாலை 7 மணிக்கு தொடங்கும். இன்று அதாவது 2025 பிப்ரவரி 15ம் தேதி மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பிற்பகல் 3 மணி வரை கனமழை பெய்யவில்லை என்றாலும், காலையில் சிறிது தூறல் இருந்தது. போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே உள்ள நிலையில், வானிலை முன்னறிவிப்பு முற்றிலும் மாறிவிட்டது. இரவு 7 மணி மற்றும் அதற்குப் பிறகு வானிலை எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: உலகக் கோப்பையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு! இந்த வீரர் இல்லாமல் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி!

கொழும்பில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி கனமழை பெய்யவில்லை. வானம் மேகமூட்டமாக இருந்தாலும், அவ்வப்போது வெயில் இருக்கும். போட்டிக்கு முன்பு மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.இதனால் டாஸ் போடும் நேரமான மாலை 6:30 மணிக்கு டாஸ் தாமதமாகலாம். இருப்பினும், போட்டியின் போது இரவு 7 மணி மற்றும் அதற்குப் பிறகு மழை பெய்யும் வாய்ப்புகள் குறைவே என்று கூறப்படுகிறது. 2 நாட்களுக்கு முன்பு வெளியான வானிலை அறிவிப்பின்படி, இந்த நேரத்தில் மழை பெய்யும் வாய்ப்பு 60 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

குவிய தொடங்கும் ரசிகர்கள்:


ஆர். பிரேமதாச ஸ்டேடியத்திற்கு வெளியே இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டியை காண ரசிகர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். போட்டியின் போது கூட்ட நெரிசலைத் தவிர்க்க 4 முதல் 5 மணி நேரத்திற்கு முன்பே ஸ்டேடியத்தின் வாயில்கள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா vs பாகிஸ்தான் டாஸ் போடும்போது வானிலை எப்படி இருக்கும்?

அக்யூவெதர் தகவலின்படி, கொழும்பில் 2026 பிப்ரவரி 15ம் தேதியான இன்று மாலை 5 மணிக்கு மழை பெய்ய 63 சதவீதம் வாய்ப்பு உள்ளது. மாலை 6 மணிக்கு மழை பெய்ய 50 சதவீதம் வாய்ப்பு உள்ளது. அதாவது டாஸ் போடும் நேரம் தாமதமாகலாம்.

ALSO READ: இந்தியா-பாகிஸ்தான் போட்டி! இரு அணிகளின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

கொழும்பில் இரவு 7 மணிக்கு வானிலை எப்படி இருக்கும் ?

கொழும்பில் காலை 7 மணிக்கு மழை பெய்ய 8 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது. அதன் பிறகும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது. ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நல்ல வடிகால் அமைப்பு உள்ளது. எனவே போட்டிக்கு முன்போ அல்லது போட்டியின் போதோ மழை பெய்தால், மழை நின்றவுடன் ஸ்டேடியத்தின் ஊழியர்கள் போட்டிக்காக மைதானத்தை விரைவாக தயார் செய்ய முடியும். இதனால், போட்டி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது.