AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

India vs Pakistan: இந்தியா-பாகிஸ்தான் போட்டி! இரு அணிகளின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

India vs Pakistan Cricket Match Playing 11: பிரேமதாச ஸ்டேடியம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், இன்றைய வானிலை வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்கலாம். வேகப்பந்து வீச்சாளர்கள் சீக்கிரமே ஸ்விங் ஆக வாய்ப்புள்ளது, இதனால் இந்தியாவுக்கு ஜஸ்பிரித் பும்ராவும், பாகிஸ்தானுக்கு ஷாஹீன் ஷா அப்ரிடியும் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

India vs Pakistan: இந்தியா-பாகிஸ்தான் போட்டி! இரு அணிகளின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
இந்தியா-பாகிஸ்தான் பிளேயிங் லெவன்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Feb 2026 14:39 PM IST

2026 டி20 உலகக் கோப்பை (T20 World Cup 2026) போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் (India vs Pakistan) இன்று அதாவது 2026 பிப்ரவரி 15ம் தேதி மோதுகின்றன. கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மழை பெய்தால் போட்டிக்கு நடைபெறுவதற்கு தடையாக இருக்கலாம். நேருக்கு நேர் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் டி20 போட்டிகளில் 16 முறை மோதியுள்ளன. இந்திய அணி 13 போட்டிகளிலும், பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. கடந்த 2025ம் ஆண்டு ஆசியக் கோப்பையில், இந்தியாவும் பாகிஸ்தானும் 3 போட்டிகளில் விளையாடியது. இந்த போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான பிளேயிங் லெவன் எப்படி உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எத்தனை மணிக்கு தொடங்கும்?

டி20 உலகக் கோப்பையில் ஒரு நாளைக்கு 3 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில், இந்தியா vs பாகிஸ்தான் இடையிலான போட்டி மூன்றாவது போட்டியாகும். அதன்படி, இந்த போட்டி இரவு 7:00 மணிக்கு தொடங்குகிறது. இதற்கு முன்பு, டாஸ் மாலை 6:30 மணிக்கு நடைபெறும்.

ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் போட்டி நேரம் மாற்றமா..? முழு விவரம் இங்கே!

இந்தியாவின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்:

இன்று அதாவது 2026 பிப்ரவரி 15ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி அதிகமாக சுழற்பந்துவீச்சாளர்களை களமிறக்கும். ஏனெனில்,  ஆர். பிரேமதாச ஸ்டேடியம் சுழலுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, இந்தியா ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்கலாம். தேவைப்பட்டால், ஹார்திக் பாண்ட்யா இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக உதவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடுகளத்தைப் பொறுத்து, இந்தியா அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம்.

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரின்கு சிங், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா .

கணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் விவரம்:

சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், சல்மான் அலி அகா (கேப்டன்), பாபர் அசாம், முகமது நவாஸ், ஷதாப் கான், ஃபஹீம் அஷ்ரஃப், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), ஷஹீன் ஷா அப்ரிடி, அப்ரார் அகமது, உஸ்மான் தாரிக்.

இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் பிட்ச் ரிப்போர்ட்:

பிரேமதாச ஸ்டேடியம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், இன்றைய வானிலை வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்கலாம். வேகப்பந்து வீச்சாளர்கள் சீக்கிரமே ஸ்விங் ஆக வாய்ப்புள்ளது, இதனால் இந்தியாவுக்கு ஜஸ்பிரித் பும்ராவும், பாகிஸ்தானுக்கு ஷாஹீன் ஷா அப்ரிடியும் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். முதலில் பேட்டிங் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்தால், துரத்தல் கடினமாக இருக்கும். பந்து இங்கு நிறைய திரும்பும் என்பதால், வருண் சக்ரவர்த்தி மற்றும் அக்சர் படேல் முக்கிய பங்கு வகிக்கலாம். அதன்படி, டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தேர்ந்தெடுப்பது ஒரு புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

ALSO READ: கொழும்பில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. பிரேமதாச ஸ்டேடியத்தில் இரு அணிகளும் இதுவரை எப்படி?

கொழும்பில் இன்று வானிலை எப்படி இருக்கும் ?

கொழும்பில் இன்று அதாவது 2026 பிப்ரவரி 15ம் தேதி நாள் முழுவதும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை மழை பெய்யும் வாய்ப்பு 10 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது முன்பு 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நல்ல வடிகால் அமைப்பு உள்ளது. எனவே மழை பெய்து போட்டிக்கு முன் நின்றால், ஊழியர்கள் போட்டிக்கு விரைவாக தயார் செய்ய முடியும். போட்டியும் நடைபெற சாத்தியக்கூறு உள்ளது.

Follow Us