மகளிர் உலகக்கோப்பை: ஸ்ரேயங்கா பாட்டீலுக்கு எதிராக களமிறங்கும் ஆர்சிபி வீராங்கனை – யார் இந்த பிரேமா ராவத்?
ICC Womens T20 World Cup 2026: ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 202 தொடரில் இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஷ்ரேயங்கா பாட்டீலுக்குப் பதிலாக மாற்று வீராங்கனை அறிவிக்கப்பட்டுள்ளார். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
காலில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆஃப் ஸ்பின் பந்து வீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டரான ஸ்ரேயங்கா பாட்டீல் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரிலிருந்து விலகியுள்ளார். நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு இந்தக் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பிசிசிஐ அவருக்கு மாற்றாக மற்றொரு வீராங்கனையை அறிவித்துள்ளது. அந்த வகையில் இதுவரை ஒரு சர்வதேசப் போட்டியில் கூட விளையாடாத ஒருவரை, ஸ்ரேயங்கா பாட்டீலுக்குப் பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
ஸ்ரேயங்கா பாட்டீலுக்கான களமிறங்கப்போவது யார்?
ஸ்ரேயங்கா பாட்டீலுக்குப் பதிலாக, இதுவரை சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமாகாத லெக் ஸ்பின்னர் பிரேமா ராவத்தை இந்திய அணி தேர்வு செய்துள்ளது. இந்திய அணிக்காக பிரேமா ராவத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஸ்ரேயங்கா பாட்டீலுக்குப் பதிலாக பிரேமா ராவத்தை சேர்ப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தொழில்நுட்ப குழு ஒப்புதல் அளித்துள்ளது.




இதையும் படிக்க : வைபவ் சூர்யவன்ஷி மீது பாயும் நடவடிக்கை? பிசிசிஐ செயலாளர் விளக்கம்
மகளிர் பிரீமியர் லீக் மற்றும் மகளிர் ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் பிரேமா ராவத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இந்தியா ஏ அணிக்காக விளையாடிய அவர், 9.62 என்ற சிறப்பான சராசரியுடன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் மகளிர் ப்ரீமியம் லிக் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார்.
ஐசிசியின் அறிவிப்பு
India suffer huge injury blow at the #T20WorldCup.https://t.co/USoyWDD8JS
— ICC (@ICC) June 18, 2026
இந்தியா ஏ அணியின் சுற்றுப்பயணத்திற்காக பிரேமா ராவத் ஏற்கனவே இங்கிலாந்தில் உள்ளார். எனவே, ஐசிசியின் ஒப்புதல் கிடைத்தவுடன் அவர் உடனடியாக உலகக் கோப்பை அணியில் இணையவுள்ளார். ஐசிசி விதிமுறைகளின்படி, போட்டியின் போது அணியில் ஒரு வீராங்கனையைச் சேர்ப்பதற்கு முன், போட்டித் தொழில்நுட்பக் குழுவின் அனுமதியைப் பெறுவது கட்டாயமாகும். இந்த நிலையில் அந்த குழுவில் வாசிம் கான், கௌரவ் சக்சேனா, பெத் பாரெட் வைல்ட் மற்றும் ஸ்டேசி ஃப்ளெமிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க : IND vs AFG: ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் – சுப்மன் கில் முன்னிலை
ஃபீல்டிங் செய்யும்போது ஸ்ரேயங்கா பாட்டீலுக்குக் காயம்
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது ஸ்ரேயங்கா பாட்டீலின் வலது கணுக்காலில் கடுமையான காயம் ஏற்பட்டது. நெதர்லாந்து அணியின் இன்னிங்ஸில் 6வது ஓவரின் முதல் பந்தில் இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது. பந்தை வீசிய பிறகு, அது மிட் ஆன் திசையை நோக்கிச் சென்ற நிலையில், அதனை தடுக்க ஸ்ரேயங்கா வேகமாக ஓடினார்.
அப்போது அவரது கால் தவறான கோணத்தில் தரையில் பட்டதால் அவர் தடுமாறி கீழே விழ நேர்ந்தது. இதில் அவரது கணுக்கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் விளைவாக அவர் ஸ்ட்ரெச்சர் மூலம் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர் பாதியில் அவர் வெளியேறுவது, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் அணி நிர்வாகத்திற்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.