AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND W vs NED W: ஸ்ரீ சரணி சுழலில் சிக்கிய நெதர்லாந்து.. டி20 உலகக் கோப்பையில் 2வது வெற்றியை பதிவு செய்த இந்திய மகளிர்!

IND W vs NED W Highlights: 2026 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இன்று அதாவது 2026 ஜூன் 17ம் தேதி இந்திய மகளிர் அணியும், நெதர்லாந்து மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. இது மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி பதிவு செய்த 2வது அதிகபட்ச ஸ்கோர்.

IND W vs NED W: ஸ்ரீ சரணி சுழலில் சிக்கிய நெதர்லாந்து.. டி20 உலகக் கோப்பையில் 2வது வெற்றியை பதிவு செய்த இந்திய மகளிர்!
இந்திய மகளிர் அணிImage Source: BCCI Women
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 17 Jun 2026 22:41 PM IST

2026 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இன்று அதாவது 2026 ஜூன் 17ம் தேதி இந்திய மகளிர் அணியும், நெதர்லாந்து மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி (Indian Womens Cricket Team) 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. இது மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி பதிவு செய்த 2வது அதிகபட்ச ஸ்கோர். இலக்கை துரத்திய நெதர்லாந்து அணி 17.3 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பந்துவீச்சில், ஸ்ரீ சரணி இந்தியாவுக்காக 4 விக்கெட்டுகளையும், நந்தினி சர்மா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நெதர்லாந்து அணிக்காக கேப்டன் பாபெட் டி லீட் 28 ரன்கள் எடுத்து அதிகபட்ச ரன்களை எடுத்தார்.

ALSO READ: சம்பவம் செய்த ஸ்மிருதி, ஷபாலி.. நெதர்லாந்து அணிக்கு 210 ரன்கள் இலக்கு!

அதிரடி தொடக்கம்:


இந்திய அணிக்காக, ஸ்மிருதி மந்தனாவும் ஷஃபாலி வர்மாவும் முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஸ்மிருதி மந்தனா 47 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 74 ரன்கள் எடுத்தார், அதே நேரத்தில் ஷஃபாலி வர்மா 38 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

Follow Us