FIFA World Cup 2026: ஃபிஃபா உலகக் கோப்பை எப்போது தொடக்கம்..? இந்தியாவில் எங்கு காணலாம்..?
FIFA World Cup 2026 Hosting: 2026 ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடர் தனது கடைசிப் போட்டியாக இருக்கலாம் என அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி சூசகமாகத் தெரிவித்துள்ளார். இது போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடைசி உலகக் கோப்பையாகவும் அமையும். இறுதி அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த 2 ஜாம்பவான்களும் விளையாடுவார்கள் என்று நம்பப்படுகிறது.
ஃபிஃபா உலகக் கோப்பையின் 23வது பதிப்பு (Fifa World Cup 2026) வருகின்ற 2026 ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெற உள்ளது. இந்த 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பையானது மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. இதற்கு காரணம் உலகின் 2 ஜாம்பவான்களான லயோனல் மெஸ்ஸியும், கிறிஸ்டியானோ ரொனால்டோவும்தான். உலகின் 2 தலை சிறந்த கால்பந்து ஜாம்பவான்களுக்கு கடைசி முறையாக உலகக் கோப்பையில் விளையாட இருக்கின்றனர். இந்த 2026ம் ஆண்டு அணிகள் மற்றும் போட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த உலகக் கோப்பை வேறு பல வழிகளிலும் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையப் போகிறது.
ALSO READ: இந்திய அணிக்கு சஞ்சுவை கேப்டனாக கொண்டு வாங்க.. முன்னாள் பயிற்சியாளர் வலுவான குரல்!
முதல் முறையாக 3 நாடுகள்:
வரலாற்றில் முதன்முறையாக 3 நாடுகள் இணைந்து ஃபிஃபா உலகக் கோப்பையை நடத்துகின்றன. 2026 ஃபிஃபா உலகக் கோப்பையை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் நடத்துகின்றன. இதற்கு முன்பு, 2 நாடுகள் இணைந்து இந்த நிகழ்வை ஒரே ஒரு முறை மட்டுமே நடத்தியுள்ளன. 2002ல், ஜப்பானும் தென் கொரியாவும் இணைந்து நடத்தின.




முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்பு:
ஃபிஃபா உலகக் கோப்பையில் இனி 32 அணிகளுக்குப் பதிலாக 48 அணிகள் பங்கேற்கும். அணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் விளைவாக, போட்டிகளின் எண்ணிக்கையும் 104 ஆக உயர்ந்துள்ளது. அனைத்து அணிகளும் தலா நான்கு அணிகள் கொண்ட 12 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அனைத்து உலகக் கோப்பைப் போட்டிகளும் 3 நாடுகளிலும் உள்ள மொத்தம் 16 நகரங்களில் நடைபெறும்.
இந்தியாவில் ஒளிபரப்பு தொடர்பாக சர்ச்சை:
ஃபிஃபா உலகக் கோப்பை தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், உலகின் மிகப்பெரிய 2 நாடுகளான இந்தியா மற்றும் சீனாவில் ஒளிபரப்பு உரிமைகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஃபிஃபாவின் அதீத பணக் கோரிக்கைகள் காரணமாக இந்த சர்ச்சை தொடர்கிறது. மேலும் இந்தியாவில் ஃபிஃபா உலகக் கோப்பையை எந்தத் தளம் நேரலையாக ஒளிபரப்பும்/ஸ்ட்ரீம் செய்யும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
ALSO READ: வங்கதேசத்திடம் பாகிஸ்தான் படுதோல்வி.. இந்திய அணிக்கு சாதகமாக அமைந்த ஐசிசி டெஸ்ட் தரவரிசை!
ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை:
2026 ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடர் தனது கடைசிப் போட்டியாக இருக்கலாம் என அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி சூசகமாகத் தெரிவித்துள்ளார். இது போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடைசி உலகக் கோப்பையாகவும் அமையும். இறுதி அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த 2 ஜாம்பவான்களும் விளையாடுவார்கள் என்று நம்பப்படுகிறது. மெஸ்ஸியும் ரொனால்டோவும் தலா 5 முறை (2006, 2010, 2014, 2018 மற்றும் 2022) உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ளனர். அதன்படி, வரவிருக்கும் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவிற்கு 6வது முறையாகும்.