Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

FIFA’s Ultimatum to AIFF: இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு வார்னிங்.. கோபத்தில் ஃபிஃபா.. தடை விதிக்கப்படுமா..?

AIFF Faces FIFA Ban Threat: AIFF மீது FIFA தடை விதிக்கலாம் என்ற அச்சுறுத்தல் நிலவுகிறது. புதிய அரசியலமைப்பை இறுதி செய்வதிலும், செயல்படுத்துவதிலும் ஏற்படும் தாமதத்திற்காக ஃபிஃபா எச்சரிக்கை விடுத்துள்ளது. 2025 அக்டோபர் 30க்குள் புதிய தேர்தலை நடத்த வேண்டும் என ஃபிஃபா உத்தரவிட்டுள்ளது.

FIFA’s Ultimatum to AIFF: இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு வார்னிங்.. கோபத்தில் ஃபிஃபா.. தடை விதிக்கப்படுமா..?
இந்திய கால்பந்து அணிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Sep 2025 13:30 PM

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) FIFA-வின் நடவடிக்கையை எதிர்கொண்டு வருகிறது. அதன்படி, உலக கால்பந்து நிர்வாகக் குழுவிலிருந்து வெளியேற்றப்படும் அச்சுறுத்தலில் இந்திய கால்பந்து கூட்டமைப்பு உள்ளது. இந்திய கால்பந்து கூட்டமைப்பின் புதிய அரசியலமைப்பை இறுதி செய்வதிலும் செயல்படுத்துவதிலும் மீண்டும் மீண்டும் ஏற்படும் தாமதங்கள் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக, ஃபிஃபா (FIFA) இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் கல்யாண் சௌபேக்கு கடந்த 2025 ஆகஸ்ட்  26ம் தேதி ஒரு கடிதம் அனுப்பியது. அதில், பலமுறை கோரிக்கைகள் விடுத்தும், தெளிவான மற்றும் வெளிப்படையான நிர்வாக அமைப்பு உருவாக்கப்படவில்லை என்று ஃபிஃபா குற்றம் சாட்டியுள்ளது. இதன் விளைவாக, இந்திய கால்பந்தில் ஒரு வெற்றிடம் மற்றும் சட்ட சிக்கல்கள் இருப்பதை ஃபிஃபா கவனித்துள்ளது.

இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடையா..?


முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு, இந்திய கால்பந்து கூட்டமைப்பை ஃபிஃபா வெளியேற்றியது. அந்த நேரத்தில், ஃபிஃபாவின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, அகில இந்திய கால்பந்து சங்கம் விரைவான தேர்தலை நடத்தி ஒரு குழுவை அமைத்தது. அப்போதுதான் கல்யாண் சௌபே அகில இந்திய கால்பந்து சங்கத்தின் தலைவரானார். அப்போது ஒரு அரசியலமைப்பு வரைவு செய்யப்பட்டு புதிய தேர்தல்கள் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நீண்ட காலமாக வழக்கு நடந்து வருகிறது. விசாரணை முடிந்துவிட்டது. விரைவான தீர்ப்பும் வழங்கப்படலாம் என்று அறியப்படுகிறது.

ALSO READ: 2030ல் இந்தியாவில் காமன்வெல்த் போட்டியா…? ஏலத்தில் பங்கேற்க தயாராகும் மத்திய அரசு!

கடந்த 2025 ஆகஸ்ட்  26ம் தேதி அகில இந்திய கால்பந்து சங்கத்திற்கு ஃபிஃபா அனுப்பிய கடிதத்தில் ஃபிஃபா உறுப்பு நாடுகளின் தலைவர் எல்கான் மம்மடோவ் மற்றும் AFC உறுப்பு நாடுகளின் துணை பொதுச் செயலாளர் வாஹித் கர்தானி ஆகியோர் கையெழுத்திட்டனர். அகில இந்திய கால்பந்து சங்கம் ஒரு அரசியலமைப்பை உருவாக்கி தேர்தல்களை நடத்த ஃபிஃபா காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, வருகின்ற 2025 அக்டோபர் 30ம் தேதிக்குள் புதிய அரசியலமைப்பின் படி தேர்தல்களை நடத்த ஃபிஃபா உத்தரவிட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு கூட்டமைப்பின் அடுத்த பொதுக் கூட்டத்தில் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அரசாங்கத்தின் தலையீடும் இல்லாமல் அனைத்தும் செய்யப்பட வேண்டும். மூன்றாம் தரப்பு தலையீடு நிகழ்ந்தால் ஃபிஃபா, இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு தடை விதிக்கலாம்.

இந்தியன் சூப்பர் லீக் மீண்டும் தொடங்குமா..?

இதற்கிடையில், கடந்த 2025 ஆகஸ்ட்  27ம் தேதி பிற்பகல் அகில இந்திய கால்பந்து சங்கம் மற்றும் கால்பந்து விளையாட்டு வளர்ச்சி லிமிடெட் (FSDL) இடையே ஒரு விவாதம் நடைபெறுகிறது. கடந்த 2025 ஆகஸ்ட்  28ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதில், இந்தியன் சூப்பர் லீக் அதாவது ISL ஐ ஒழுங்கமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அகில இந்திய கால்பந்து சங்கம் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். சிறிது காலமாக இந்தியன் சூப்பர் லீக்  குறித்து நிச்சயமற்ற தன்மை இருந்தது.

ALSO READ: ஹாக்கி ஆசியக் கோப்பை 2025யில் இந்தியா சூப்பர் 4-க்குள்! ஜப்பானை வீழ்த்தி முன்னேற்றம்..!

இருப்பினும், வருகின்ற 2025 அக்டோபர் 24 முதல் இந்தியன் சூப்பர் லீக்கை தொடங்க திட்டமிட்டுள்ளதாக இப்போது கூறப்படுகிறது . கால்பந்து விளையாட்டு வளர்ச்சி லிமிடெட் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நீட்டிப்பதன் மூலம் வருகின்ற 2025 டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு 2026 மார்ச் வரை ரூ.12.5 கோடியை செலுத்தும் என்று செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், FIFAவின் கடிதம் குறித்து அகில இந்திய கால்பந்து சங்கம் சரியான விளக்கம் அளிக்கவில்லை எனில், தடை விதிக்கப்படலாம்.