Hockey Asia Cup 2025: ஹாக்கி ஆசியக் கோப்பை 2025யில் இந்தியா சூப்பர் 4-க்குள்! ஜப்பானை வீழ்த்தி முன்னேற்றம்..!
India Dominates Hockey Asia Cup 2025: இந்திய ஹாக்கி அணி ஆசியக் கோப்பை 2025-ல் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்து சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்திய இந்தியாவிற்கு, ஹர்மன் பிரீத் சிங் இரண்டு கோல்களையும், மந்தீப் சிங் ஒரு கோலையும் அடித்தனர்.

பீகாரின் ராஜ்கிரில் நடைபெற்று வரும் ஹாக்கி ஆசிய கோப்பை 2025 (Hockey Asia Cup 2025) போட்டியில் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஹாக்கி ஆசிய கோப்பை 2025ல் சீனாவை தொடர்ந்து, ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஜப்பானை தோற்கடித்தது. தொடர்ச்சியாக 2 வெற்றிகளுடன், இந்திய அணி சூப்பர் 4 நிலைக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி சூப்பர் 4ல் தனது இடத்தை உறுதி செய்தது. இந்த போட்டியில் மந்தீப் சிங் முதல் கோலை அடிக்க, ஹர்மன்ப்ரீத் சிங் (Harmanpreet Singh) 2 கோல்களை அடித்தார்.
மீண்டும் கலக்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத்:
இந்திய அணிக்காக வழக்கம்போல் கேப்டன் ஹர்மன்ப்ரீத், 3வது காலிறுதியின் முடிவில் ஜப்பானுக்கு எதிரான பெனால்டி கார்னரை கோலாக மாற்றி இந்தியாவின் கோல் எண்ணிக்கை உயர்த்தினார். இருப்பினும், இந்தியா பல வாய்ப்புகளை தவறவிட்டது. 2வது பாதியின் தொடக்கத்தில் ஜப்பான் ஒரு கோல் அடித்து இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்தது. இதன்பிறகு, இந்திய அணி மீண்டும் தாக்குதலை தொடுத்தது. 3வது பாதியின் இறுதியில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய ஹர்மன்ப்ரீத் கோலாக மாற்றினார்.
ALSO READ: கோவாவில் FIDE செஸ் உலகக் கோப்பை.. எப்போது தொடங்குகிறது..?




இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது..?
இந்திய ஹாக்கி அணி தனது கடைசி பூல்-ஏ போட்டியில் 2025 செப்டம்பர் 1ம் தேதி கஜகஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. இந்தியா ஏற்கனவே சூப்பர் 4க்கு முன்னேறிவிட்டது. ஆனால், கஜகஸ்தானுக்கு எதிரான வெற்றியோ தோல்வியோ இந்திய அணிக்கு எந்த பாதிப்பையும் தராது. ஆனால், புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை தக்க வைக்கும். மறுபுறம் ஜப்பான், கஜகஸ்தானை 13-1 என்ற கணக்கில் வென்ற சீனாவை எதிர்கொள்ளும். சீனா இந்தியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.
இருப்பினும், இந்த போட்டியில் ஜப்பானுக்கு எதிராக 7 கோல்களையும், சீனாவுக்கு எதிராக 13 கோல்களையும் விட்டுக்கொடுத்து, தொடர்ந்து கோல்களை கசியவிட்டு வரும் கஜகஸ்தானை இந்தியா வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள இடத்தைப் பெற சீனாவும் ஜப்பானும் போட்டியிடுவதால், இந்தியா ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டது.
ALSO READ: 2030ல் இந்தியாவில் காமன்வெல்த் போட்டியா…? ஏலத்தில் பங்கேற்க தயாராகும் மத்திய அரசு!
இந்தியா மற்றும் கஜகஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2025 ஹாக்கி போட்டி செப்டம்பர் 1, 2025 அதாவது இன்று பீகாரின் ராஜ்கிரில் உள்ள ராஜ்கிர் ஹாக்கி மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும். இந்த போட்டியை இந்தியாவில் SonyLiv ஆப் மற்றும் வெப்சைட்டில் பார்க்கலாம். டிவியை பொறுத்தவரை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் காணலாம் .