கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தவர் கொலை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
Chennai Crime News: சென்னை பல்லாவரம் அருகே கால்பந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த 48 வயதான ரஞ்சித் குமார் என்பவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 18 வயதான ஜோஸ்வா கைது செய்யப்பட்டுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்பகை இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

சென்னை, ஆகஸ்ட் 18: சென்னை பல்லாவரம் அருகே கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை பல்லாவரம் அருகே உள்ள பம்மலில் இருக்கும் பசும்பொன் நகர் பகுதியில் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். 48 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உடன் வசித்து வரும் ரஞ்சித் குமார் நேற்று விடுமுறை தினம் என்பதால் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கால்பந்து மைதானத்தில் அமர்ந்து அங்கு இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.
மைதானத்தில் நடந்த கொலை
அப்போது திடீரென அங்கு வந்த இளைஞர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரஞ்சித் குமாரை சரமாரியாக வெட்டத் தொடங்கினான். அவரது அலறல் சத்தம் கேட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த நபர்கள் உடனடியாக ஓடி வந்தனர். சிலர் ரஞ்சித் குமாரை வெற்றிய நபரை பிடித்தனர் உடனடியாக இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு ரஞ்சித் குமாரை கொண்டு சென்றனர் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துரதிஷ்டவசமாக அவர் உயிரிழந்தார்.
Also Read: Crime: சிறுமி கடத்தல்.. சினிமாவை மிஞ்சிய ட்விஸ்ட்.. கடைசியில் சிக்கிய இளைஞன்!




போலீசார் தீவிர விசாரணை
இதற்கிடையில் ரஞ்சித் குமாரை தாக்கிய நபரை பகுதியில் இருந்த நபர்கள் சக மாறியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் ரஞ்சித் குமாரை தாக்கிய நபர் அஜித்குமார் என்கிற ஜோஸ்வா என்பது தெரியவந்தது. 18 வயதான அவர் மீது சங்கர் நகர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட ரஞ்சித்தும் ஜோஸ்வாவும் உறவினர்கள் என்பதும் விசாரணையில் வெளிப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரஞ்சித் குமார் ஜோஸ்வாவின் உறவுக்கார பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜோஸ்வாவை ரஞ்சித் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகத்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜோஸ்வாவிடம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை சம்பவம் பம்மல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.