Suresh Raina: கில், ஷ்ரேயாஸ் வேண்டாம்! இவரை ஒன் டே கேப்டனாக போடுங்க.. சுரேஷ் ரெய்னா கருத்து!
India's Next ODI Captain: சுப்மன் கில் 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றதைத் தொடர்ந்து, அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியின் கேப்டனாக அவரை நியமிக்க பிசிசிஐ திட்டமிடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, கில் ஒருநாள் போட்டிக்கு ஹர்திக் பாண்டியா ஒருநாள் கேப்டனாக அற்புதங்களைச் செய்வார் என்றார்.

2025 ஆசியக் கோப்பைக்கான (2025 Asia Cup) இந்திய டி20 அணியில் சுப்மன் கில் மீண்டும் இடம் பெற்ற பிறகு அனைத்து வடிவங்களிலும் கேப்டனாக கொண்டு வர கில்லை பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. 2025 டி20 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அடுத்த ஒருநாள் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறப்பட்டது. இந்தநிலையில், முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா, கில்லை ஒருநாள் கேப்டன் பதவிக்கு வலுவான போட்டியாளர் என்று அழைத்தாலும், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு (Hardik Pandya) ஒருநாள் போட்டியில் கேப்டன் பதவி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ALSO READ: ஆசிய கோப்பை ஸ்பான்சர் இல்லாமல் விளையாடப்போகும் இந்தியா?




என்ன சொன்னார் சுரேஷ் ரெய்னா..?
Statements by Suresh Raina:
– Gill over Iyer any day
– Hardik will do miracles as captain
– He has Kapil dev level experience
– He is a player’s Captain
– He gives me glimpses of MS DhoniAnyways Hardik is always there as a leader,Target Asia cup and T20wc ❤️ pic.twitter.com/c28RZtTQvz
— Nenu (@Nenu_yedavani) August 30, 2025
சுபாங்கர் மிஸ்ராவின் பாட்காஸ்டில் ரோஹித் சர்மாவுக்கு பிறகு, அடுத்த ஒருநாள் கேப்டன் யார் என்று ரெய்னாவிடம் கேட்டப்பட்டது. அதற்கு பதிலளித்த ரெய்னா, “சுப்மன் கில் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஹர்திக் பாண்ட்யா ஒருநாள் கேப்டனாக அற்புதங்களை செய்வார் என்று நான் இன்னும் நினைக்கிறேன். ஹர்திக் மீண்டும் கேப்டனாக வருவார் என்று நம்புகிறேன். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் போலவே அவருக்கு அனுபவம் உள்ளது. அது பேட்டிங், பந்துவீச்சு அல்லது பீல்டிங் என எதுவாக இருந்தாலும் சரி. ஹர்திக் வீரர்களின் கேப்டன். மேலும், ஹர்திக்கிடம் கொஞ்சம் எம்.எஸ்.தோனியை பார்க்கலாம். ஹர்திக் பாண்ட்யா ஸ்டேடியத்தில் ஆற்றலை காட்டும் விதம் எனக்கு பிடிக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ சுப்மன் கில் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்படுவார் என்று நாங்கள் அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால், அவர் எதிர்பார்த்தை விட சிறப்பாக செயல்பட்டார்.” என்றார்.
ALSO READ: ஆசியக் கோப்பையில் திடீரென போட்டி நேரம் மாற்றம்.. தாமதமாக விளையாடும் 8 அணிகள்..!
ஹர்திக் பாண்ட்யா அனுபவம்:
31 வயதான ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்காக 3 ஒருநாள் போட்டிகளிலும், 16 டி20 போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஐபிஎல்லில் ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை தாங்கி வருகிறார். மேலும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைமை தாங்கி சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். 2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்ட்யா இந்தியாவின் துணை கேப்டனாகவும் இருந்தார்.