Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Fruits Eating Tips: பழங்களை உட்கொள்வதற்கு முன்! எதனுடன் சாப்பிடக்கூடாது தெரியுமா?

Fruits And Vegetables: கொய்யா, ஆப்பிள், வாழை என அனைத்தையும் ஒன்றாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், பலருக்கும் சில குறிப்பிட்ட பழங்களை எக்காரணத்தை கொண்டும் ஒன்றாகச் சாப்பிடக்கூடாது என்று தெரியவில்லை. இவ்வாறு செய்வது உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், எந்த பழங்களை ஒன்றாகச் சாப்பிடக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

Fruits Eating Tips: பழங்களை உட்கொள்வதற்கு முன்! எதனுடன் சாப்பிடக்கூடாது தெரியுமா?
ஆரோக்கியமான பழங்கள்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Dec 2025 17:54 PM IST

ப்ரஷான பழங்களில் ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துகள் (Nutrients) மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இதன் காரணமாகவே, பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமாக இருக்க தினமும் பழங்களை உட்கொள்கிறார்கள். ஆனால், பலருக்கும் பழங்களை எப்படி எடுத்து கொள்வது என்பது தெரியாது. கொய்யா, ஆப்பிள் (Apple), வாழை என அனைத்தையும் ஒன்றாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், பலருக்கும் சில குறிப்பிட்ட பழங்களை எக்காரணத்தை கொண்டும் ஒன்றாகச் சாப்பிடக்கூடாது என்று தெரியவில்லை. இவ்வாறு செய்வது உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், எந்த பழங்களை ஒன்றாகச் சாப்பிடக்கூடாது என்பதை இங்கே கொய்யா, ஆப்பிள், வாழை என அனைத்தையும் ஒன்றாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், பலருக்கும் சில குறிப்பிட்ட பழங்களை எக்காரணத்தை கொண்டும் ஒன்றாகச் சாப்பிடக்கூடாது என்று தெரியவில்லை. இவ்வாறு செய்வது உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், எந்த பழங்களை ஒன்றாகச் சாப்பிடக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

பழங்களை எப்படி ஒன்றாக சாப்பிடக்கூடாது..?

பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமாக இருக்க தினமும் பல்வேறு வகையான பழங்களை மாற்றி மாற்றி எடுத்து கொள்கிறார்கள். இது உடல் எடையை குறைக்கவும்,  பசியைப் போக்கவும், ஆரோக்கியமாக ஒரு சிறந்த வழியாகும். ஆனால் பழ சாலட் தயாரிக்கும் போது, ​​அதில் சேர்க்கப்படும் பழங்களின் கலவையை சரியான முறையில் கவனிக்காவிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும்.

ALSO READ: எந்த காய்கறிகளை மீண்டும் சூடுபடுத்தக்கூடாது? ஏன் இவற்றை சாப்பிடக்கூடாது?

கேரட் – ஆரஞ்சு:

கேரட் மற்றும் ஆரஞ்சு பழங்களை ஒன்றாக எடுத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. அதாவது, இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக உட்கொள்வது நெஞ்செரிச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், இந்த கலவை உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதன்படி, கேரட் மற்றும் ஆரஞ்சு ஆகியவற்றை ஒன்றாகச் சாப்பிடுவது அமிலத்தன்மை, தலைவலி போன்ற பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.

அன்னாசிப்பழம் மற்றும் பால்:

அன்னாசிப்பழத்தில் தயாரிக்கப்படும் அன்னாசி பழச்சாற்றில் இருந்து வெளியாகும் ப்ரோமெலைன் என்ற நொதி உள்ளது. இதை பாலுடன் சேர்த்து சாப்பிடும்போது, இவை வயிற்றுக்குள் வினைபுரிந்து வாயு, குமட்டல் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

எலுமிச்சை பிழிந்து சாப்பிடுதல்:

பலரும் தயாரிக்கப்பட்ட பழ சாலட்களில் எலுமிச்சையை பிழிந்து சாப்பிடுகிறார்கள். இந்த புளிப்பு சுவை நிறைந்த பழங்களின் கலவையை விரும்புகிறார்கள். அதேநேரத்தில், நீங்கள் பப்பாளி சாப்பிடுகிறீர்கள் என்றால், அப்படிச் செய்வது மிகவும் தவறு. பப்பாளி மற்றும் எலுமிச்சை ஒரு கொடிய கலவையாகும். மேலும் இவை இரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் சமநிலையின்மையை ஏற்படுத்தி பிரச்சனையை கொடுக்கும்.

ALSO READ: வாங்கிய பச்சை பட்டாணி வாடிவிடுகிறதா? இதை செய்தால் ப்ரஷாக இருக்கும்!

அதேநேரத்தில், பலரும் பச்சை காய்கறிகளுடன் பழங்களை எடுத்து கொள்கிறார்கள். இப்படி, காய்கறிகளை பழங்களுடன் சேர்த்து சாப்பிடுவதால் வயிற்றில் நச்சுகள் உருவாகின்றன. இது வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் வலியை ஏற்படுத்தும். எனவே, கவனத்துடன் பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்து கொள்வது உங்களை ஆரோக்கியமாக வைக்கும்.