Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: ஆரோக்கியமான சியா விதைகள்.. இந்த பிரச்சனை இருந்தால் தவிருங்கள்!

Chia Seeds Side Effects: இதய நோயாளிகளுக்கு சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 கள் நன்மை பயக்கும். இருப்பினும், இரத்தம் உறைதல் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு அல்லது வார்ஃபரின், ஆஸ்பிரின் போன்ற இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு, தினமும் சியா விதைகளை சாப்பிடுவது ஆபத்தானது.

Health Tips: ஆரோக்கியமான சியா விதைகள்.. இந்த பிரச்சனை இருந்தால் தவிருங்கள்!
சியா விதைகள்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Nov 2025 21:42 PM IST

சியா விதைகளில் (Chia Seeds) நார்ச்சத்து, புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. வெறும் 2 டீஸ்பூன் சியா விதைகளில் சுமார் 10 கிராம் நார்ச்சத்து (Fiber) உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி நீண்ட நேரம் உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை தரும். அதேபோல், சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆனால் அதிகமாக சாப்பிடுவது எப்போதும் நல்லதல்ல என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். சியா விதைகளை ஊறவைக்காமல் அல்லது குறைந்த தண்ணீரில் சாப்பிட்டால், வாய்வு, வாயு அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, அவற்றை ஊறவைத்த பிறகு அல்லது போதுமான தண்ணீரில் சாப்பிட வேண்டும்.

ALSO READ: சமைக்கும்போது இந்த தவறுகளை செய்கிறீர்களா..? இது சிறுநீரகத்தை பாதிக்கும்!

சியா விதைகளை யார் யார் சாப்பிடக்கூடாது..?

இதய நோயாளிகளுக்கு சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 கள் நன்மை பயக்கும். இருப்பினும், இரத்தம் உறைதல் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு அல்லது வார்ஃபரின், ஆஸ்பிரின் போன்ற இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு, தினமும் சியா விதைகளை சாப்பிடுவது ஆபத்தானது. இது உடலில் இரத்தப்போக்கு அல்லது எளிதில் சிராய்ப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

சில ஆய்வுகள் சியா விதைகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் உதவியாக இருப்பதாகக் காட்டுகின்றன. இவற்றில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஒமேகா-3 கள் உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு நல்லது. ஆனால் ஏற்கனவே குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, தினசரி நுகர்வு தலைச்சுற்றல் அல்லது சோர்வு போன்ற பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடும்.

சர்க்கரை நோயாளிகள்:

சியா விதைகள் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகின்றன. இதன் காரணமாக,  சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இவை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால் சர்க்கரையை மெதுவாக உறிஞ்சுகின்றன. ஆனால் ஒருவர் இன்சுலின் அல்லது சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகளை எடுத்துக் கொண்டால், சியா விதைகளை தினமும் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவைக் கணிசமாகக் குறைக்கும்.

ALSO READ: தினமும் ஒரு வேகவைத்த முட்டை.. சரியாகும் புரதச்சத்து குறைபாடு..!

எனவே, சர்க்கரை நோயாளிகள் தினமும் இவற்றை உட்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது முக்கியம். இந்த விதைகள் மருந்துகளின் விளைவுகளை அதிகரிக்கக்கூடும், இது இரத்தச் சர்க்கரைக் குறைவு அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். சியா விதைகள் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், அனைவரும் அவற்றை தினந்தோறும் சாப்பிட வேண்டிய அவசியமில்லை. இவற்றை சரியான அளவில் (1-2 தேக்கரண்டி) தண்ணீருடன் சாப்பிடுவது உங்களுக்கு நன்மை பயக்கும். இருப்பினும், இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அல்லது இரத்த உறைவு பிரச்சினைகள் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.