Health Tips: ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முள்ளங்கி.. ஆனால்! யார் யார் தவிர்க்க வேண்டும்..?
Radish Side Effects: முள்ளங்கியை மக்கள் சாம்பார் முதல் சாலடுகள், அதன் இலைகளை கீரைகள் வரை அனைத்தையும் ஆரோக்கிய (Health) காரணத்திற்காக பயன்படுத்துகிறார்கள். இவை அனைத்தும் சுவையானவை மற்றும் நன்மை பயக்கும். ஆரோக்கியமான சருமம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற நன்மைகளையும் முள்ளங்கி வழங்குகிறது.
குளிர்கால காய்கறியான முள்ளங்கி (Radish) உடலுக்கு பல வகையில் நன்மைகளை தரும். உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வாரி வழங்கும் பண்பை முள்ளங்கி கொண்டுள்ளது. அதன்படி, முள்ளங்கியை மக்கள் சாம்பார் முதல் சாலடுகள், அதன் இலைகளை கீரைகள் வரை அனைத்தையும் ஆரோக்கிய (Health) காரணத்திற்காக பயன்படுத்துகிறார்கள். இவை அனைத்தும் சுவையானவை மற்றும் நன்மை பயக்கும். சரியான செரிமானத்தை பராமரிப்பது மற்றும் உடலை நச்சு நீக்குவது முதல், எடை இழப்பு, ஆரோக்கியமான சருமம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற நன்மைகளையும் முள்ளங்கி வழங்குகிறது.
முள்ளங்கியில் உள்ள ஊட்டச்சத்துகள்:
முள்ளங்கியில் நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவற்றில் சிறிய அளவில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள், இரும்பு, துத்தநாகம் மற்றும் தாமிரம் ஆகியவையும் உள்ளன. பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், முள்ளங்கி சிலருக்கு தீங்கு விளைவிக்கும்.
ALSO READ: இதயம் முதல் அழகு வரை.. உடலில் சாகசம் செய்யும் சங்குப்பூ..!
முள்ளங்கியை சிலர் ஆரோக்கியத்திற்காக பச்சையாகவும் சமைத்தும் சாப்பிடுகிறார்கள். இது பல வழிகளில் உடலுக்கு நன்மைகளை வழங்குகிறது. ஆனால் சில மருத்துவ பிரச்சனை உள்ளவர்கள் முள்ளங்கி சாப்பிடுவதை கட்டுப்படுத்த அல்லது தவிர்க்க வேண்டும். அதன்படி, இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள்:
முள்ளங்கியில் கோயிட்ரோஜன்கள் இருப்பதாகவும், அவை தைராய்டு சுரப்பியைப் பாதிக்கக்கூடும் என்றும் உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, தைராய்டு பிரச்சினைகள் (ஹைப்போ தைராய்டிசம்) உள்ளவர்கள் அவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
ஆஸ்துமா நோயாளிகள்:
குளிர்காலத்தில் வெப்பநிலை குறைந்து குளிர்ந்த உணவுகள் அவர்களை மோசமாக்கும் என்பதால், ஆஸ்துமா உள்ளவர்கள் அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
வைரஸ் காய்ச்சல்:
குளிர்காலத்தில் இருமல், சளி அல்லது தலைவலி பிரச்சனை இருந்தால், அவற்றை பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, இரவில் முள்ளங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது பிரச்சனையை மோசமாக்கும். அதேபோல், குறிப்பாக ஒற்றைத் தலைவலி உள்ளவர்களும் அவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
ALSO READ: வானிலை மாறும்போது குழந்தைகளுக்கு ஏன் டக்கென்று காய்ச்சல் வருகிறது..? காரணம் இதோ!
மேலும் சில..
நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்ப காலத்தில் முள்ளங்கியை மிகக் குறைந்த அளவிலேயே சாப்பிட வேண்டும். மேலும், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் முள்ளங்கியை தவிர்க்க வேண்டும். இது சில நேரங்களில் செரிமான பிரச்சனையையும், இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கக்கூடும்.
அதன்படி, முள்ளங்கியில் ஏற்கனவே சோடியம் அதிகமாக உள்ளது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். செரிமான உணர்திறன் உள்ளவர்கள் முள்ளங்கி சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.