Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kidney Health: சமைக்கும்போது இந்த தவறுகளை செய்கிறீர்களா..? இது சிறுநீரகத்தை பாதிக்கும்!

Kidney Care Tips: பெரும்பாலான மக்கள் தங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவதில்லை. சேதமடைந்த பின்னர்தான் அதன் மீது அக்கறை கொள்கிறோம். சிறுநீரக நோய்கள் ஆரம்பத்தில் மெதுவாக உருவாக தொடங்கி, அறிகுறிகள் தோன்ற நீண்ட நாட்கள் எடுக்கும். எனவே, கண்காணித்து சிகிச்சை பெறுவது முக்கியம்.

Kidney Health: சமைக்கும்போது இந்த தவறுகளை செய்கிறீர்களா..? இது சிறுநீரகத்தை பாதிக்கும்!
சிறுநீரக பாதிப்புImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 30 Oct 2025 15:36 PM IST

நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பின் செயல்பாடும் முக்கியமானது. அதேநேரத்தில், இதயத்திற்கு அடுத்து சிறுநீரகம் மிகவும் அவசியமான உறுப்பாக உடலில் பார்க்கப்படுகிறது. ஏனெனில் சிறுநீரகம் (Kidney) இரத்தத்தை சுத்திகரித்தல், உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் கூறுகளை அகற்றுதல், நீர் மற்றும் தாதுக்களின் சமநிலையை பராமரித்தல் போன்ற பல வேலைகளை செய்கிறது. ஆனால் நாம் அறியாமல் செய்யும் சில அன்றாட பழக்கவழக்கங்கள் சிறுநீரகங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். குறிப்பாக, சமைக்கும் போது நாம் தினமும் செய்யும் ஒரு எளிய தவறு சிறுநீரகங்களின் ஆயுளைக் குறைத்து இறுதியில் டயாலிசிஸுக்கு வழிவகுக்கும்.

உடலில் கெட்ட பழக்கங்களின் பக்க விளைவுகள்:

பெரும்பாலான மக்கள் தங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவதில்லை. சேதமடைந்த பின்னர்தான் அதன் மீது அக்கறை கொள்கிறோம். சிறுநீரக நோய்கள் ஆரம்பத்தில் மெதுவாக உருவாக தொடங்கி, அறிகுறிகள் தோன்ற நீண்ட நாட்கள் எடுக்கும். இதை தொடர்ந்து உடலில் வீக்கம், சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும்போது, ​​சிறுநீரகங்களுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. எனவே, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வாழ்க்கை முறை மற்றும் உணவில் சிறிய தவறுகளைத் தவிர்ப்பது முக்கியம்.

ALSO READ: சிறுநீரகங்கள் நலமாக உள்ளதா? இந்த அறிகுறி தெளிவுபடுத்தும்..!

அதிகப்படியான உப்பு:

அன்றாட உணவில் நம் சரியான அளவில் சேர்க்கப்படும் உப்புதான் சுவையை தருகிறது. ஆனால் அதன் அளவு கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது உடலுக்கு ஒரு விஷம் போல மாற தொடங்கும். அதிகமாக உப்பு சாப்பிடுவது உடலில் நீரின் அளவை அதிகரிக்கிறது, இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுவதில்லை. இது சிறுநீரகங்களுக்கு தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, அதிகப்படியான உப்பு உடலில் சோடியத்தின் அளவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக, சிறுநீரகங்கள் அதை வெளியேற்ற கடினமாக உழைக்க தொடங்கும்.

இப்படியே தொடர்ந்து செயல்படும்போது, சிறுநீரகங்களில் ஏற்படும் இந்த நிலையான அழுத்தம் அவற்றின் வடிகட்டும் திறனைக் குறைக்கிறது. இந்த நிலை நீண்ட நாட்கள் தொடர்ந்தால், சிறுநீரகங்களில் உள்ள சிறிய இரத்த நாளங்கள் சேதமடைகின்றன. படிப்படியாக, சிறுநீரகங்கள் செயல்படுவதை முற்றிலுமாக நிறுத்துகின்றன. பின்னர் டயாலிசிஸ் அவசியமாகிறது.

ALSO READ: அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் ஆபத்தா..? எத்தனை முறை வெளியேறுவது சாதாரணமானது?

ஆரோக்கியமாக சிறுநீரகத்தை பராமரிக்க என்ன செய்யலாம்..?

உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க மிக முக்கியமான விஷயம். உங்கள் உணவில் உப்பின் அளவைக் குறைப்பதாகும். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 கிராம் உப்பை உட்கொள்ளுங்கள். இதனுடன், நிறைய தண்ணீர் குடிக்கவும், ப்ரஷான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடவும், துரித உணவைத் தவிர்க்கவும் அவசியம். மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் மருந்துகளை அதிகமாக உட்கொள்வதும் உங்கள் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். சிறுநீரக நோய் வந்தவுடன், அதைக் கட்டுப்படுத்துவது கடினம். எனவே, இன்றிலிருந்து உங்கள் பழக்கவழக்கங்களை மாற்றுவது அவசியம்.