Kitchen Hacks: வாங்கிய பச்சை பட்டாணி வாடிவிடுகிறதா? இதை செய்தால் ப்ரஷாக இருக்கும்!
Green Peas Storage: மழை மற்றும் குளிர்காலத்தில் பட்டாணியை நீண்ட நேரம் புதியதாக வைத்திருக்க பிளாஞ்சிங் சிறந்த வழியாகும். இதைச் செய்ய, பட்டாணியை உரித்து, குளிர்ந்த நீரில் நன்கு கழுவி, கொதிக்க வைத்து, பின்னர் 2 முதல் 3 நிமிடங்கள் கொதிக்கும் நீரில் மூழ்க வைக்கவும். கொதிக்கும் நீரிலிருந்து அகற்றி உடனடியாக அவற்றை ஐஸ்-குளிர்ந்த நீரில் போட்டால், அதன் நிரம் பச்சை நிறமாகவே இருக்கும்.
மழைக்காலத்துடன் (Rainy Season) குளிர்காலமும் நெருங்கி வருவதால் பச்சைப் பட்டாணிகல் மார்க்கெட்டில் எளிதாக கிடைக்கிறது. இவற்றை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கும்போது குழம்பு மற்றும் கிரேவிகளுக்கு அதிக சுவை கிடைக்கும். குறைந்த விலையில் அதிகமாக கிடைக்கிறது என்று மக்கள் அதிகளவில் வாங்கி விடுகிறார்கள். ஆனால, இவை சிறிது நாட்களிலேயே விரைவாக காய்ந்துவிடும், அப்படி இல்லையென்றால் முளைக்க தொடங்கிவிடுகிறது அதன்படி, இவ்வளவு சுவை மிகுந்த பச்சை பட்டாணியை (Green Peas) நீண்ட காலத்திற்கு எப்படி பாதுகாப்பது? இவற்றை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாமா என்ற கேள்வி எழுக்கிறது. அதன்படி, இன்று நாம் பட்டாணியை குளிர்சாதன பெட்டியில் வைத்தாலும் சரி, குளிர்சாதன பெட்டியில் வைக்காவிட்டாலும் சரி, நீண்ட நாட்கள் ப்ரஸாக வைத்திருக்க உதவும் சில எளிய வீட்டு குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: எந்த காய்கறிகளை மீண்டும் சூடுபடுத்தக்கூடாது? ஏன் இவற்றை சாப்பிடக்கூடாது?
மழை மற்றும் குளிர்காலத்தில் பட்டாணியை ப்ரஸாக வைத்திருக்க குறிப்புகள்:
மழை மற்றும் குளிர்காலத்தில் பட்டாணியை நீண்ட நேரம் புதியதாக வைத்திருக்க பிளாஞ்சிங் சிறந்த வழியாகும். இதைச் செய்ய, பட்டாணியை உரித்து, குளிர்ந்த நீரில் நன்கு கழுவி, கொதிக்க வைத்து, பின்னர் 2 முதல் 3 நிமிடங்கள் கொதிக்கும் நீரில் மூழ்க வைக்கவும். கொதிக்கும் நீரிலிருந்து அகற்றி உடனடியாக அவற்றை ஐஸ்-குளிர்ந்த நீரில் போட்டால், அதன் நிரம் பச்சை நிறமாகவே இருக்கும். தொடர்ந்து, இவற்றை ஒரு லேசான துணியில் பரப்பி, ஈரப்பதத்தை நீக்க சிறிது உலர வைக்கவும். அடுத்ததாக பட்டாணியை காற்று புகாத டப்பா அல்லது ஜிப்-லாக் பையில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். இதை செய்வதன் மூலம் 8 முதல் 12 மாதங்கள் வரை அப்படியே இருக்கும்.




குளிர்சாதன பெட்டி இல்லாமல் பட்டாணியை எப்படி பாதுகாக்கலாம்?
வெயிலில் காயவைத்து பாதுகாத்தல்:
உங்களிடம் குளிர்சாதன பெட்டி இல்லையென்றால், பட்டாணியை சூரிய ஒளியில் 2 முதல் 3 நாட்கள் உலர வைக்கவும். முழுமையாக காய்ந்ததும், அவற்றை ஒரு துணிப் பையில் அல்லது காற்று புகாத பெட்டியில் போடலாம். இது பட்டாணியை 2 முதல் 3 மாதங்கள் வரை பாதுகாப்பாக வைக்கும்.
ALSO READ: மழைக்காலத்தில் காளான் ஆரோக்கியமானதா? தவிர்ப்பது ஏன் நல்லது..?
மஞ்சள் நீரில் ஊறவைத்தல்:
குளிர்சாதன பெட்டி இல்லாதவர்கள் இரவு முழுவதும் பட்டாணியை மஞ்சள் நீரில் ஊற வைக்கவும். நீங்கள் பட்டாணியை இரவு முழுவதும் பாதுகாப்பாக வைக்க விரும்பினால், தண்ணீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் சேர்த்து அதில் பட்டாணியை ஊற வைக்கவும். இவ்வாறு செய்வது சுமார் 12 மணி நேரம் புதியதாக வைத்திருக்கும்.