Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Monsoon Health Tips: மழைக்காலத்தில் அடிக்கடி உடல்நல கோளாறு? உங்களை கவனித்து கொள்வது எப்படி?

Monsoon Infections: கனமழை மற்றும் நீர் தேங்குவது கொசுக்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பிற நோய்களின் இனப்பெருக்க இடங்களாக மாறும். இது மலேரியா, காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். இந்த நோய்களைத் தவிர்க்கவும், மழைக்காலத்தில் உங்களை நீங்களே பாதுகாத்து கொள்வதும் எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

Monsoon Health Tips: மழைக்காலத்தில் அடிக்கடி உடல்நல கோளாறு? உங்களை கவனித்து கொள்வது எப்படி?
மழைக்கால உடல்நல பராமரிப்புImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Dec 2025 18:03 PM IST

டிட்வா மழை (Cyclone Ditwah) காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இது வெயிலில் இருந்து நமக்கு குளிர்ச்சியை கொடுத்தாலும், லேசான தூறல், குளிர்ந்த காற்று நமக்கு சளியை ஏற்படுத்தும். தொடர்ந்து, கனமழை மற்றும் நீர் தேங்குவது கொசுக்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பிற நோய்களின் இனப்பெருக்க இடங்களாக மாறும். இது மலேரியா, காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். இந்த நோய்களைத் தவிர்க்கவும், மழைக்காலத்தில் (Rainy Season) உங்களை நீங்களே பாதுகாத்து கொள்வதும் எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

சுத்தமான தண்ணீர்:

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது மழைக்காலத்தில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு ஆகும். வெயில் காலமோ அல்லது மழைக்காலமோ வானிலை எதுவாக இருந்தாலும் தண்ணீர் குடிப்பது. மழைக்காலத்தில் நீரேற்றமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பலரும் தண்ணீரை சூடுப்படுத்தி குடிப்பது கிடையாது. இது வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதன்படி, நீங்கள் வெளியே சென்றால், ஒரு தண்ணீர் பாட்டிலை கையோடு எடுத்துச் செல்வது நல்லது. முடிந்தால், குடிப்பதற்கு முன் தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பது நல்லது.

ALSO READ: மழைக்காலத்தில் பளபளப்பை இழக்கும் சருமம்.. வறட்சி பிரச்சனையை இப்படி மீட்டெடுக்கலாம்!

சுத்தமான துணி அணிதல்:

தினமும் துணியை அயர்ன் செய்து அணிவது நம் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியமானது. மழை அதிகரிக்கும் போது, ​​ஈரப்பதமும் அதிகரிக்கும். இதனால், நீங்கள் துவைப்பது மடித்து வைத்திருக்கும் துணிகளில் ஈரப்பதம் காரணமாக பூஞ்சை காளான்களை வளரலாம். எனவே, நீங்கள் மழைக்காலத்தில் துணிகளை அணியும்போது அயர்ன் செய்து அணிவது பாதுகாப்பானது. இது தோல் பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

உடற்பயிற்சி செய்தல்:

மழைக்காலத்தில் நம்மில் பெரும்பாலோர் சோம்பேறித்தனத்தால் உடல் செயல்பாடுகளை மேற்கொள்வது கிடையாது. மேலும், மழைக்காலத்தில் நீங்கள் வழக்கமாக மேற்கொள்ளும் ஜாகிங், ஓட்டம் அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சிக்கு வெளியே செல்ல முடியாமல் போகலாம். ஆனால் யோகா போன்ற வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய சில பயிற்சிகள் உள்ளன. இவையும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. ஏனெனில் இது மழைக்காலத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

துரித உணவுகள்:

மழைக்காலத்தில் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கூடுதல் கவனத்துடன் இருப்பது முக்கியம். உங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதால், தெரு மற்றும் துரித உணவை முழுமையாக தவிர்க்க வேண்டும். தெருக்களில் விற்கப்படும் உணவுகள் பல்வேறு நோய்களை வளர்க்கும். எனவே, திறந்தவெளியில் விற்கப்படும் உணவுகளை சாப்பிடுவது, நோய்க்கான ஆபத்து அதிகமாகும், எனவே சில எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.

ALSO READ: மழைக்காலத்தில் பாத வெடிப்பா..? எளிதாக சரிசெய்யும் வீட்டு பொருட்கள்..!

உணவில் கவனம்:

தயிர் போன்ற போதுமான புரோபயாடிக் உணவுகளை எடுத்து கொள்வது முக்கியம். இவற்றைத் தொடர்ந்து உட்கொள்வது பாக்டீரியாவை எதிர்த்துப் போராட ஆரோக்கியமான குடலைப் பராமரிக்க உதவுகிறது. கூடுதலாக, உங்கள் உணவில் புதிய காய்கறிகளைச் சேர்க்கவும். ஏனெனில் அவற்றில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. காய்கறிகள் மற்றும் பழங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை நன்கு கழுவ மறக்காதீர்கள். இது மழைக்காலத்தில் உங்களுக்கு தேவையான ஆரோக்கியத்தை தரும்.