Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Cooking Oil: ஒரே சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துகிறீர்களா? எத்தனை முறை சூடுபடுத்துவது பாதுகாப்பானது?

Reheating Cooking Oil: FSSAI கூற்றின்படி, எண்ணெயை மீண்டும் சூடாக்கி அல்லது பலமுறை பயன்படுத்துவதை தவிர்க்கப்பட வேண்டும். இருப்பினும், பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயம் ஏற்பட்டால் டாக்கப்பட்ட எண்ணெயை அதிகபட்சமாக 3 முறை பயன்படுத்தலாம். பொரித்த எண்ணெயை வடிகட்டி மீண்டும் பயன்படுத்தினால், வறுக்காமல் லேசான சமையலுக்குப் பயன்படுத்துவது நல்லது.

Cooking Oil: ஒரே சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துகிறீர்களா? எத்தனை முறை சூடுபடுத்துவது பாதுகாப்பானது?
சமையல் எண்ணெய்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Nov 2025 16:37 PM IST

பலரும் சமையலறையில் (Kitchen) பூரி மற்றும் பஜ்ஜி பொரித்த எண்ணெய்களை ஒரு முறை பயன்படுத்திய பிறகு, அதை சேமித்து மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த எண்ணெயை மீண்டும் சூடாக்கி பயன்படுத்தி கொள்கிறார்கள். இருப்பினும், இந்த பழக்கம் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்று FSSAI கூறுகிறது. ஏனெனில், சமையல் எண்ணெயை (Cooking Oil) பல முறை சூடாக்கும்போது அதன் வேதியியல் கலவை மாறி, தீங்கு விளைவிக்கும் கலவைகள் உருவாகலாம். அந்தவகையில், சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினால் என்ன நடக்கும்..? இது பாதுகாப்பானதா..? இதை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினால் என்ன நடக்கும்..?

சமையல் எண்ணெயை பல மடங்கு சூடாக்கி பயன்படுத்தும்போது, மொத்த போலார் கலவைகள் (TPC) எனப்படும் வேதியியல் சேர்மங்களின் அளவை அதிகரிக்கிறது. அத்தகைய எண்ணெயில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் குறைகின்றன. எண்ணெய் விரைவாக ஆக்ஸிஜனேற்றமடைந்து, அதன் நிறம், வாசனை மற்றும் சுவையை மாற்றும். இதை பயன்படுத்துவதன்மூலம் டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் ஹைட்ராக்ஸி-ஆல்டிஹைடுகள் போன்ற தீங்கு விளைவிக்கும் சேர்மங்கள் உருவாகலாம்.

ALSO READ: பச்சை மிளகாய் வெட்டி கைகளில் எரிச்சலா..? சரிசெய்யும் வீட்டு பொருட்கள்..!

இப்படியான எண்ணெயை பயன்படுத்தும்போது உயர் இரத்த அழுத்தம், தமனி அல்லது இதய நோய் அபாயம் அதிகரிக்கலாம். இதுமட்டுமின்றி, கல்லீரல் மற்றும் பிற உறுப்புகளையும் பாதிக்க செய்யலாம். இந்த எண்ணெயை பயன்படுத்தும்போது, உணவின் சுவை மற்றும் தரம் மாறுவது மட்டுமின்றி, எண்ணெயில் புகை நாற்றம் மற்றும் நுரை போன்றவை உருவாகி ஃபுட் பாய்சனை உண்டாக்கலாம்.

சமையல் எண்ணெயை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்தலாம்..?

FSSAI கூற்றின்படி, எண்ணெயை மீண்டும் சூடாக்கி அல்லது பலமுறை பயன்படுத்துவதை தவிர்க்கப்பட வேண்டும். இருப்பினும், பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயம் ஏற்பட்டால் டாக்கப்பட்ட எண்ணெயை அதிகபட்சமாக 3 முறை பயன்படுத்தலாம். இருப்பினும், எண்ணெய் ஒருமுறை பயன்படுத்தும்போது எண்ணெயின் நிறம் மற்றும் வாசனை மாறியிருந்தால் அதை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பொரித்த எண்ணெயை வடிகட்டி மீண்டும் பயன்படுத்தினால், வறுக்காமல் லேசான சமையலுக்குப் பயன்படுத்துவது நல்லது. எண்ணெய் புகைந்து, நுரை வந்து, நிறம் கருமையாகி, வாசனை மாறியிருந்தால், அதை அப்புறப்படுத்த வேண்டும்.

ALSO READ: சமைத்த உணவுகளை மீண்டும் சூடாக்கி சாப்பிடலாமா? இது ஆரோக்கியத்தை சீர்குலைக்குமா?

வணிகர்கள் கவனத்திற்கு..

தினமும் 10 லிட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணெயை பயன்படுத்துவோர் தங்கள் எண்ணெய் பயன்பாட்டை கண்காணிப்பது நல்லது. எண்ணெயின் நிறம் மற்றும் அதன் வாசனை மாறியிருந்தால் பயன்படுத்தும் நிறுவனம் அப்புறப்படுத்த வேண்டும்.