Monsoon Avoids Foods: மழைக்காலத்தில் காளான் ஆரோக்கியமானதா? தவிர்ப்பது ஏன் நல்லது..?
Monsoon Foods Tips: மழைக்காலத்தில் காளான்களால் பலரும் அழற்ஜி பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். அதாவது, காளான்களை சாப்பிடுவதால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரணம் பிரச்சனைகள் கூட ஏற்படலாம். இருப்பினும், காளான்களை சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால் நாங்கள் சொல்லும் விஷயங்களை மனதில் கொண்டு வாங்குங்கள்.
மழைக்காலம் (Monsoon) ஏராளமான பாக்டீரியா மற்றும் பூஞ்சை நோய்களை வளர்க்கும். பலரும் மழைக்காலத்தில் எத்தகைய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி தெரியாது. காய்கறிகள் முதல் காளான்கள் (Mushroom) வரை பழைய அல்லது கெட்டுப்போனவற்றை வாங்கி சமைத்து சாப்பிட்டு நோய்வாய்ப்படுவார்கள். அதேநேரத்தில், இத்தகைய பருவ மாற்றத்தின்போது பலரும் காளான்களை சாப்பிட்டு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். மேலும், மழைக்காலத்தில் காளான்களை ஏன் சாப்பிடக்கூடாது? பிரஸான காளான்கள் ஆரோக்கியம் தருமா என்பதை தெரிந்து கொள்வோம்.
மழைக்காலத்தில் காளான்களை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
காளான்கள் வைட்டமின் டி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் நன்மை பயக்கும். பலர் சிக்கன் மற்றும் மட்டனுக்கு மாற்றாக காளானை எடுத்துக்கொள்கிறார்கள். காளான்கள் ஈரமான மற்றும் ஈரப்பதமான சூழலில் செழித்து வளரும் ஒரு பூஞ்சை என்பதால், மழைக்காலம் அவற்றில் இன்னும் அதிகமான பாக்டீரியாக்கள் வளரக்கூடும். எனவே, மழைக்காலத்தில் காளான்களை முடிந்தவரை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
மழைக்காலத்தில் காளான்களால் பலரும் அழற்ஜி பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். அதாவது, காளான்களை சாப்பிடுவதால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரணம் பிரச்சனைகள் கூட ஏற்படலாம். இருப்பினும், காளான்களை சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால் நாங்கள் சொல்லும் விஷயங்களை மனதில் கொண்டு வாங்குங்கள்.




ALSO READ: மழைக்காலத்தில் எலும்பு வலிமை குறையுமா..? அதிகரிக்க இதுதான் சிறந்த வழி!
மழைக்காலத்தில் ப்ரஷான காளான்களை எப்படி வாங்குவது..?
- மிக சிறியதாகவோ அல்லது மிக பெரியதாகவோ இருக்கும் காளான்களை வாங்குவதை தவிர்க்கவும்.
- காளான்களை வாங்கும்போது, அவற்றில் அதிகப்படியான அழுக்குகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
- காளான் தண்டுகளிலிருந்து தொடங்கி உள்ளே கருக்கிறதா என்பதை சோதியுங்கள். காளான் கருப்பாக தெரிந்தால், அவற்றை தவிர்ப்பது நல்லது.
பச்சை இலை காய்கறிகள்:
கீரை போன்ற பச்சை இலை காய்கறிகளை சாப்பிடுவது பெருமாலும் நல்ல ஆரோக்கியத்திற்கு பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், மழைக்காலத்தில் அவற்றை உட்கொள்வது உங்களை நோய்வாய்ப்படுத்தலாம். மழைக்காலத்தில் பூச்சிகள் இந்த காய்கறிகளை மாசுபடுத்தி, பல்வேறு நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
கடல் உணவுகள்:
மழைக்காலத்தில் கடல் உணவுகளை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மழைக்காலம் மீன்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த நேரத்தில் கடல் உணவுகளை சாப்பிடுவது பல்வேறு தொற்றுகள் மற்றும் புட் பாய்சன் அபாயத்தை அதிகரிக்கும்.
ALSO READ: கீரையை எப்போது சாப்பிடக்கூடாது..? எவ்வளவு நேரம் சமைப்பது நல்லது..?
காரமான வறுத்த உணவு:
மழைக்காலத்தில் ஒருவரின் செரிமான அமைப்பு மெதுவாக்கி, காரமான மற்றும் வறுத்த உணவுகளை ஜீரணிக்க கடினமாகிறது. பலரும் மழைக்காலத்தில் பக்கோடா, சமோசாக்கள், சிப்ஸ் போன்றவற்றை சாப்பிட விரும்புவார்கள். ஆனால், இவை அனைத்தும் வாயு, அமிலத்தனமை மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தலாம்.