Monsoon Health Tips: மழைக்காலத்தில் எலும்பு வலிமை குறையுமா..? அதிகரிக்க இதுதான் சிறந்த வழி!
Bone Health Tips: வைட்டமின் டி நமது உடலுக்கு இன்றியமையாதது. ஏனெனில், இது நமது உடல்கள் கால்சியத்தை சரியாக உறிஞ்சி வலுவான எலும்புகளை பராமரிக்க உதவுகிறது. வைட்டமின் டி குறைபாடு எலும்புகளை பலவீனப்படுத்தி அவற்றை எளிதில் உடைக்க செய்யும். எலும்பு வலிமையான உணவுகள் கால்சியம் நிறைந்த உணவுகள் அடர்த்தியான மற்றும் வலுவான எலும்புகளை உருவாக்க உதவும் முக்கிய கனிமமாகும்.
மழை (Rainy Season) மற்றும் குளிர்காலத்தில் சூரிய ஒளி இல்லாதது உங்கள் எலும்புகளை பாதிக்கும். சூரிய ஒளி குறைவாக இருக்கும்போது, உடலின் வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்பட தொடங்குகிறது. இது உடல் கால்சியத்தை (Calcium) உறிஞ்சி எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு எலும்பு வலிமை குறைந்து எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகம். மழை மற்றும் குளிர்காலத்தில் உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்க எலும்பியல் நிபுணர்கள் ஒரு வழக்கத்தை கடைப்பிடிக்க பரிந்துரைக்கின்றனர். அதன்படி, வலி, எலும்பு முறிவுகள் மற்றும் நீண்டகால எலும்பு இழப்பை தடுப்பதில் சிறிய மாற்றங்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
எலும்புகளை வலுவாக வைத்திருக்க என்ன செய்யலாம்..?
- மழை மற்றும் குளிர்காலத்தில் எப்போதாவது சூரிய ஒளிபடும்போது, உங்கள் உடலை சூரிய ஒளியில் பட செய்யுங்கள்.
- நீங்கள் எடுத்துகொள்ளும் உணவில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.
- உடல்ரீதியாக உங்களை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளுங்கள். எலும்பு அடர்த்திக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை தவிருங்கள்.
ALSO READ: மழைக்காலத்தில் காலையில் எழுந்ததும் தொண்டை வறட்சியா..? இது ஏன் ஏற்படுகிறது?
வைட்டமின் டி எலும்பு ஆரோக்கியம்:
வைட்டமின் டி நமது உடலுக்கு இன்றியமையாதது. ஏனெனில், இது நமது உடல்கள் கால்சியத்தை சரியாக உறிஞ்சி வலுவான எலும்புகளை பராமரிக்க உதவுகிறது. வைட்டமின் டி குறைபாடு எலும்புகளை பலவீனப்படுத்தி அவற்றை எளிதில் உடைக்க செய்யும். எலும்பு வலிமையான உணவுகள் கால்சியம் நிறைந்த உணவுகள் அடர்த்தியான மற்றும் வலுவான எலும்புகளை உருவாக்க உதவும் முக்கிய கனிமமாகும். பெரியவர்களுக்கு தினமும் சுமார் 1,000 மி.கி கால்சியமும், வயதானவர்களுக்கு சுமார் 1,200 மி.கி கால்சியமும் தேவைப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கால்சியம் உட்கொள்வது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்க உதவுகிறது. இது தசை செயல்பாடு, நரம்பு பரவுதல் மற்றும் இரத்த உறைதல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் அவசியமானதாக அமையும்.




வைட்டமின் டி பராமரிக்க எளிய வழிகள்:
சூரிய ஒளி:
தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 20-30 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருங்கள். இது உங்கள் உடல் தானாகவே வைட்டமின் டி உற்பத்தி செய்ய உதவுகிறது.
வைட்டமின் டி உணவுகள்:
சால்மன், டுனா, சார்டின்கள், செறிவூட்டப்பட்ட பால், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் காளான்கள் போன்ற மீன்களை உங்கள் உணவில் சேர்க்கவும். இவை அனைத்தும் வைட்டமின் டி இன் நல்ல ஆதாரங்களாக கருதப்படுகிறது.
சப்ளிமெண்ட்:
உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி, குளிர்காலத்தில் தினமும் 600–800 IU வைட்டமின் D3 மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
ALSO READ: மழைக்காலத்தில் குடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்கவழக்கங்கள்.. ஏன் இதை தவிர்க்க வேண்டும்?
கால்சியம் நிறைந்த உணவுகள்:
பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்கள். சார்டின்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட சால்மன் போன்ற மீன்கள். கேழ்வரகு, டோஃபு, எள் மற்றும் இலை காய்கறிகள் எடுத்து கொள்ளலாம். கூடுதலாக, கால்சியத்திற்கு செறிவூட்டப்பட்ட தானியங்கள், சோயா பால் மற்றும் பாதாம் போன்றவற்றையும் எடுத்து கொள்ளலாம்.