Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: பூண்டு அனைவருக்கும் நன்மை தருமா..? இந்த பிரச்சனை இருந்தால் தவிர்ப்பது நல்லது!

Side Effects of Garlic: பூண்டு அனைவருக்கும் நன்மை பயக்காது என்பதை கவனத்தில் கொள்வதும் மிக மிக முக்கியம். பூண்டில் இருக்கும் அதிகப்படியான நுகர்வு காரணமாக சிலருக்கு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அந்தவகையில், பூண்டை யார் குறைவாக சாப்பிட வேண்டும்..? யார் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Health Tips: பூண்டு அனைவருக்கும் நன்மை தருமா..? இந்த பிரச்சனை இருந்தால் தவிர்ப்பது நல்லது!
பூண்டின் பக்கவிளைவுகள்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 Oct 2025 19:37 PM IST

பூண்டு பல நூற்றாண்டுகளாக இந்திய சமையலறையில் (Indian Kitchen) பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூண்டு உணவின் சுவையை அதிகரிப்பதற்கு மட்டுமல்லாமல், அதன் ஆரோக்கிய நன்மைகளுக்கும் பெயர் பெற்றது. மேலும், ஆயுர்வேதத்திலும் பூண்டு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. பூண்டில் காணப்படும் அல்லிசின் வலுவான நறுமணத்தையும், ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. இது தொற்றுகளிலிருந்து பாதுகாக்கவும், வீக்கத்தை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. எனவே அனைவரும் தங்களது உணவில் பூண்டை ஏராளமாக எடுத்து கொள்கிறார்கள். ஆனால், பூண்டு (Garlic) அனைவருக்கும் நன்மை பயக்காது என்பதை கவனத்தில் கொள்வதும் மிக மிக முக்கியம். பூண்டில் இருக்கும் அதிகப்படியான நுகர்வு காரணமாக சிலருக்கு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அந்தவகையில், பூண்டை யார் குறைவாக சாப்பிட வேண்டும்..? யார் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

இரத்தத்தை மெலிதாக்கும்:

பூண்டு இரத்தத்தை மெலிதாக்க உதவுகிறது. இது பொதுவாக நல்லது என்றாலும், நீங்கள் ஆஸ்பிரின் அல்லது வார்ஃப்ரின் போன்ற மருந்துகளை எடுத்துகொள்பவர்களாக இருந்தால் அதிகமாக பூண்டு சாப்பிடுவது இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும். எனவே, அறுவை சிகிச்சைக்கு முன் அல்லது பின், காயம் ஏற்பட்ட பின் என குறைந்த அளவில் பூண்டு எடுத்து கொள்வது சிறந்தது.

ALSO READ: ஆரோக்கியமான கல்லீரல் செயல்பட வேண்டுமா..? இவை உணவில் இடம்பெறுவது கட்டாயம்!

அமிலத்தன்மை – நெஞ்செரிச்சல்:

உங்களுக்கு அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், பூண்டு உங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கும். இதன் வயிற்று அமிலம் தொண்டைக்குள் பாய்வதை தடுக்கும் தசையை தளர்த்தி, நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது.

வயிற்று பிரச்சனைகள்:

பூண்டில் பிரக்டான்ஸ் எனப்படும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இதன் காரணமாக சிலரால் வயிறால் சரியாக ஜீரணிக்க முடியாது. இது வாயு, வீக்கம் அல்லது வயிற்று வலியை ஏற்படுத்தும். அதேபோல், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி உள்ளவர்களும் பூண்டை தவிர்ப்பது நல்லது.

ஒவ்வாமை:

சிலருக்கு பூண்டு சாப்பிட்டாலே ஒவ்வாமை பிரச்சனை ஏற்படும். உங்களுக்கு பூண்டு சாப்பிட்டு ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டால் தவிர்ப்பது நல்லது. பூண்டானது வாய் அரிப்பு, குமட்டல், தோல் அலற்ஜி அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்.

ALSO READ: வெறும் வயிற்றில் வைட்டமின் டி சப்ளிமெண்ட்.. இது பலன் தருமா..? விரிவான பார்வை!

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள்:

கர்ப்ப காலத்தில் பாலூட்டும் காலத்திலும் சிறிய அளவில் பூண்டு சாப்பிடுவது நல்லது. இருப்பினும், அதிகமாக பூண்டு உட்கொள்வது கருப்பை சுருக்கங்களை ஏற்படுத்தும். மேலும், குழந்தைக்கு கொடுக்கும் பாலின் சுவையை மாற்றும். இதனால், குழந்தை பாலை குடிக்க விரும்பாது.