Yuvraj Singh: இந்திய இளம் வீரர்களுக்கு புது வழிகாட்டி.. யுவராஜ் சிங்கின் பயிற்சி பயனளிப்பது ஏன்?
Yuvraj singh Training: யுவராஜ் சிங் வழிகாட்டியாக வடிவம் பெற்றதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, பேட்டிங்கின் நுணுக்கங்களைப் பற்றிய அவரது அபரிமிதமான புரிதல் வெளிப்படுகிறது. உதாரணத்திற்கு உடலில் இருந்து விலகிச் செல்லும் பந்துகளை சமநிலையை இழக்காமல் ஆஃப்சைடில் அடிக்கும் நுட்பத்தை யுவராஜ் அபிஷேக் சர்மாவுக்குக் கற்றுக் கொடுத்தார்.
இந்திய கிரிக்கெட்டில் (Indian Cricket Team) வரலாற்றில் ஒரு காலத்தில் சிக்ஸர்களின் மன்னராகவும், ஆல்ரவுண்டராகவும் ஜொலித்த யுவராஜ் சிங், தற்போது புதிய பயிற்சியாளர் அவதாரம் எடுத்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு, பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் பிடித்த பயிற்சியாளராக யுவராஜ் சிங் (Yuvraj Singh) மாறியுள்ளார். அதன்படி, சமீப காலமாக ஃபார்மை இழந்து அணியில் இடம் பெற போராடும் வீரர்களுக்கு யுவராஜ் சிங் நம்பிக்கை அளிப்பதோடு, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் குறிப்பிடத்தக்க ஆலோசனைகளை வழங்கி வருகிறார். சமீபத்தில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தனது ஆட்டத்தை மேம்படுத்துவதற்காக மும்பையில் யுவராஜ் சிங்கிடம் சென்று தனிப்பட்ட பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
ALSO READ: அக்சர் படேலிடம் மன்னிப்பு கேட்ட சூர்யகுமார் யாதவ்.. இந்திய அணியில் நடந்தது என்ன?




பார்ம் அவுட்டில் தவிக்கும் ரிஷப் பண்ட்:
ரிஷப் பண்ட் கடந்த சில காலமாக ஒருநாள் மற்றும் டி20 ஓவர்கள் கிரிக்கெட்டில் தனது இடத்தை இழந்து வருகிறார். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் கே.எல். ராகுலும், டி20 போட்டிகளில் இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் போன்றவர்கள் விக்கெட் கீப்பில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர், தற்போது ரிஷப் பண்ட் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார் என்றாலும், அங்கும் அவரது இடம் கேள்விக்குறியாக உள்ளது. இவ்வளவு கடினமான நேரத்தில் பவர் ஹிட்டிங்கில் தனக்கென ஒரு சிறப்பு முத்திரையைப் பதித்த யுவராஜை விட வேறு வழிகாட்டி இருக்க முடியாது என்று உணர்ந்த ரிஷப் பண்ட் ஆலோசனைகளை பெற்று வருகிறது.
யுவராஜ் வழிகாட்டியாக வடிவம் எடுத்தது எப்படி..?
IPL 2026, get ready 😎⏳ pic.twitter.com/m52HipvOlr
— Lucknow Super Giants (@LucknowIPL) March 7, 2026
யுவராஜ் ஒரு வழிகாட்டியாக இவ்வளவு பிரபலமாக இருப்பதற்குக் காரணம், சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி அளித்து இந்திய அணிக்குள் இடம் பிடிக்க உதவி செய்தார். இதுமட்டுமின்றி, கொரோனா காலத்தில் சில பஞ்சாப் வீரர்களுக்கும் யுவராஜ் சிங் தனது வீட்டில் இலவசமாக பயிற்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவரான சுப்மன் கில் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக மாறியுள்ளார். அதே நேரத்தில், அபிஷேக் சர்மா ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உள்ளார். சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பை நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மா அரைசதம் அடித்திருந்தார். யுவராஜ் சிங்கிடம் பயிற்சி பெற்ற பிரப்சிம்ரன் சிங்கும் ஐபிஎல்லில் தனது பலத்தைக் காட்டுகிறார்.
யுவராஜ் சிங் வழிகாட்டியாக வடிவம் பெற்றதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, பேட்டிங்கின் நுணுக்கங்களைப் பற்றிய அவரது அபரிமிதமான புரிதல் வெளிப்படுகிறது. உதாரணத்திற்கு உடலில் இருந்து விலகிச் செல்லும் பந்துகளை சமநிலையை இழக்காமல் ஆஃப்சைடில் அடிக்கும் நுட்பத்தை யுவராஜ் அபிஷேக் சர்மாவுக்குக் கற்றுக் கொடுத்தார். இரண்டாவதாக, ஒரு மூத்த சகோதரனைப் போல வீரர்களுடன் பழகி இளம் வீரர்களுக்கு நம்பிக்கையை தருகிறார். இதன் மூலம், வீரர்கள் எந்த அழுத்தமும் இல்லாமல் தங்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது.
ALSO READ: கம்பீருக்கு இனிமேல்தான் சோதனை ஆரம்பம்.. எச்சரித்த சவுரவ் கங்குலி!
இந்திய அணி 2 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணம்:
2007 டி20 மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பைகளில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு யுவராஜ் சிங்கின் பங்கு மிக மிக முக்கியமானது. இந்திய அணிக்காக பவர் ஹிட்டர்களில் ஒருவராகவும் இருந்த யுவராஜ் சிங்கின் அனுபவம் இப்போது இளைஞர்களை வழிநடத்த பெரிதும் உதவுகிறது. வரும் நாட்களில் ரிஷப் பண்ட் தனது ஃபார்மை மீட்டெடுத்தால் அந்த பெருமை யுவராஜ் சிங்கை சாரும்.