AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Natural Hair Care: மா தோலை தூக்கி எறியாதீர்கள்! இது முடி வளர்ச்சியை வலுப்படுத்தும் அருமருந்து..!

Mango Peel and Seed for Dandruff: மழைக்காலத்தில் அதிகரிக்கும் பொடுகு மற்றும் முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு மாம்பழம் ஒரு இயற்கைத் தீர்வு. மாம்பழத்தின் தோல் மற்றும் கொட்டையைப் பயன்படுத்தி பொடுகு நீக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் முடியும். மாங்காய் கொட்டை பொடியுடன் தயிரை கலந்து தலையில் பயன்படுத்துவது பயனுள்ளது. மாங்காய் சீசன் இல்லையெனில் தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றின் கலவையை பயன்படுத்தலாம். இயற்கை முறையில் முடி மற்றும் உச்சந்தலை பிரச்சனைகளைத் தீர்க்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

Natural Hair Care: மா தோலை தூக்கி எறியாதீர்கள்! இது முடி வளர்ச்சியை வலுப்படுத்தும் அருமருந்து..!
மா தோல்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 Jun 2025 14:56 PM IST

கோடைக்காலத்தில் (Summer) இருந்து மழைக்காலம் மாறும் காலம் இது என்பதால் வெப்பமும் குளிர்ச்சியும் ஒரே நேரத்தில் ஏற்படும். இந்த காலநிலை மாற்றம் பல தோல் மற்றும் முடி பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இவற்றில் பொதும்வான பிரச்சனைகளில் ஒன்று தலை முடி உதிர்தல் மற்றும் பொடுகு ஆகும். மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்க தொடங்கும். இதன் காரணமாக, பூஞ்சை உச்சந்தலையில் எளிதில் வளர்ந்து பொடுகு (Dandruff) பிரச்சனை அதிகரிக்கிறது. இது தலையில் அரிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், முடி உதிர்தலையும் ஏற்படுத்தி தொல்லை தரும். இதுபோன்ற சூழ்நிலையில், ஒரு பொருளை கொண்டு ரசாயன ஷாம்புகளை விட மிகவும் பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். மழைக்காலத்தில் பொடுகை வேர்களில் இருந்து அகற்ற உதவும் மாம்பழத்தின் (Mango) பயன்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

பெரும்பாலான மக்கள் கோடைக்காலத்தின்போது மாம்பழத் தோலை சாப்பிட்ட பிறகு தூக்கி எறிந்து விடுவார்கள். இருப்பினும், அதன் நன்மைகளை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் மாம்பழத் தோலில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. மாம்பழத்தைப் போலவே, அதன் தோலும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக முடி மற்றும் சருமத்திற்கு அதாவது அழகுக்கு, இது பல அதிசயங்களைச் செய்யும். அதன்படி, மாம்பழக தோலை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

தலைமுடிக்கு வலிமை தரும் மாம்பழ கொட்டை:

மாம்பழத்தின் கொட்டையை உங்கள் தலைமுடியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், பொடுகை நீக்கி, முடி உடைவதைத் தடுக்கிறது. இதை தலையில் தடவுவதன்மூலம், உங்கள் தலைமுடியை கருமையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது.

மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு தூக்கி எறிவதற்குப் பதிலாக, அதை உடைத்து அதன் உள்ளே உள்ள கொட்டையை வெளியே எடுக்கவும். இப்போது இந்த கொட்டையை உலர்த்தி பொடியாக ஆக்குங்கள். இப்போது இந்தப் பொடியுடன் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து உங்கள் தலைமுடியில் தடவினால், முடி உதிர்தல் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளும் நீங்கும். இந்த மாம்பழத்தின் கொட்டைகளில் கொழுப்பு அமிலங்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதை பயன்படுத்துவது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமின்றி, முடியை பலப்படுத்துகிறது.

பொடுகு பிரச்சனை:

பொடுகு பிரச்சனையிலும் இது மிகவும் நன்மை பயக்கும். பயனுள்ள முடிவுகளுக்கு, நீங்கள் மா விதைகளை எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தலாம்.

மாம்பழ சீசன் முடிந்து விட்டது என்ற கவலை உங்களுக்கு இருந்தால், மாம்பழத்திற்கு பதிலாக தயிர் மற்றும் எலுமிச்சையை பயன்படுத்தலாம். அரை கப் தயிரில் ஒரு எலுமிச்சை சாற்றை கலந்து உச்சந்தலையின் வேர்களில் தடவலாம். தயிரானது உச்சந்தலையை குளிர்விக்கும், அதேநேரத்தில் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் பொடுகை நீக்க உதவுகிறது. இதை தலைமுடியில் பயன்படுத்திய பிறகு, சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு லேசான ஷாம்பு பயன்படுத்தி கழுவலாம்.இது உச்சந்தலையில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்யும்.

Follow Us