Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Pimples and Gut Health: முகத்தில் பருக்கள் ஏன் தோன்றுகிறது..? இதற்கும் வயிற்றுக்கும் என்ன சம்பந்தம்..?

Digestive Issues Acne: முகப்பருக்கள் பெரும்பாலும் சரும துளைகள் அடைவதால் ஏற்படுகின்றன. ஆனால், வயிற்று வெப்பமும் இதற்கு ஒரு முக்கிய காரணம். வயிற்று வெப்பம், ஹார்மோன் மாற்றங்கள், குடல் தொற்று போன்றவை முகப்பருக்களை அதிகரிக்கும். தண்ணீர் அதிகம் குடிப்பது, குளிர்ந்த நீரில் குளிப்பது, காரமான உணவுகளைத் தவிர்ப்பது போன்றவை வயிற்று வெப்பத்தை குறைக்கும். மன அழுத்தத்தைக் குறைத்தல், போதுமான தூக்கம் அவசியம்.

Pimples and Gut Health: முகத்தில் பருக்கள் ஏன் தோன்றுகிறது..? இதற்கும் வயிற்றுக்கும் என்ன சம்பந்தம்..?
முகப்பருImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 Jun 2025 19:06 PM IST

இளமை காலத்தின்போது பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி முகத்தில் பருக்கள் (Pimples) அடிக்கடி தோன்றும். பருவ வயதினரும், இளம் பெண்கள் இந்தப் பருக்களைப் பற்றி மிகவும் கவலைப்படுவார்கள். முகத்தை சுத்தமாகவும், பருக்கள் இல்லாமல் வைத்திருக்கவும், இளம் வயதினர் ஆன்லைன் மூலமாகவும் கடைகளிலும் பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்களை (Cosmetics) வாங்குகிறார்கள். இது அவர்களுக்கு முழுமையான தீர்வை கொடுக்குமா என்றால், இதுவரை தெளிவான பதில் இல்லை. முதலில் பருக்கள் ஏன் ஏற்படுகின்றன, அவற்றை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். பருக்களுக்கு முக்கிய காரணம் சருமத்துளைகள் அடைத்துக் கொள்வதாகும். இது பல காரணங்களால் நிகழலாம்.

எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கு சருமத்துளைகள் அடிக்கடி அடைத்துக் கொள்ளும். இது ஏற்படும்போது, ​​பருக்கள் தோன்ற ஆரம்பிக்கும். பொதுவாக, சருமத்தை சிகிச்சை செய்து சுத்தம் செய்த பிறகு பருக்கள் குணமடையத் தொடங்கும். ஆனால், சருமத்துளைகள் அடைபட்டிருந்தால், அவை மீண்டும் ஏற்படும். இருப்பினும், வயிறு தொடர்பான சில நோய்களும் பருக்கள் வர காரணமாகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா..?

வயிற்றில் உண்டாகும் வெப்பம்:

பருக்கள் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று வயிற்றில் ஏற்படும் வெப்பமாகும். இது பலருக்கும் தெரியாது. இதன் காரணமாக, பலருக்கு வாய்களிலும் அடிக்கடி வாய்ப்புண் ஏற்படும். வயிற்றில் ஏற்படும் வெப்பமானது, உடலில் வியர்வையை அதிகரிக்க செய்யும். இந்த வியர்வையானது அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களுடன் சேர்ந்து, முகத்தில் உள்ள துளைகளை அடைக்கிறது. இதனுடன், வெப்பம் சருமத்தில் வீக்கத்தையும் ஏற்படுத்தும். இதையே பருக்கள் என்று அழைக்கிறோம்.

இந்த வெப்பமானது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் ஏற்படுகிறது. ஹார்மோன் மாற்றங்களைத் தவிர, குடல் தொற்று, சுத்தமற்ற வயிறு மற்றும் உடலில் அழுக்கு குவிதல் போன்ற காரணங்களால் முகம் மற்றும் சருமத்தில் பருக்கள் தோன்றலாம். இதனால்தான் பருக்கள் அதிகமாக வருபவர்கள் வெளி உணவு மற்றும் எந்த வகையான துரித உணவையும் சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது.

வயிற்று சூட்டை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

  • வயிற்றின் வெப்பத்தை குறைக்கவும், குளிர்ச்சியாகவும் வைத்திருக்கவும் நிறைய தண்ணீர் குடித்து நீரேற்றமாக வைக்கலாம்.
  • குளிர்ந்த நீரில் தினமும் 2 முறை குளிப்பதும் இதற்கு தீர்வை தரும்.
  • காரமான மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும்
  • சருமத்தை சுத்தமாகவும், அதேநேரத்தில் நீரேற்றமாகவும் வைத்து கொள்ளுங்கள்.
  • மன அழுத்தத்தைக் குறைத்து போதுமான தூக்கத்தைப் பெறுங்கள்.
  • பருக்கள் தீவிரமாக இருந்தால் அல்லது குணமாகவில்லை என்றால், மருத்துவரை அணுகலாம்.