AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜெகன்மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கிய தொண்டர்.. தலை நசுங்கி பலி.. ஆந்திராவில் ஷாக்!

Jagan Mohan Reddy Car Accident : ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கி கட்சி தொண்டர் ஒருவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி வாகன பேரணியில் ஈடுபட்டிருந்த போது, இந்த விபத்து நடந்துள்ளது

ஜெகன்மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கிய தொண்டர்.. தலை நசுங்கி பலி.. ஆந்திராவில் ஷாக்!
ஜெகன் மோகன் ரெட்டி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 22 Jun 2025 17:56 PM IST

ஆந்திரா, ஜூன் 22 : ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி  (Jagan Mohan Reddy) கார் டயரில் சிக்கி கட்சி தொண்டர் ஒருவர் உயிரிழந்தது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி வாகன பேரணியில் ஈடுபட்டிருந்த போது, இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமாக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி சட்டெனப்பள்ளிக்கு கட்சியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று ஆறுதல் கூறினார். அதன்பிறகு ஜெகன் மோகன் ரெட்டி காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். குண்டூர் மாவட்டம் அருகே ரெண்டப்பள்ளி கிராமத்திற்கு அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, கட்சியின் ஆதரவாளர்கள் சாலையோரத்தில் கூடியிருந்தார்.

ஜெகன்மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கிய தொண்டர்

அவர்கள், ஜெகன் மோகன் ரெட்டியின் கார் மீது மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர். ஜெகன் மோகன் ரெட்டியை பார்க்க அவரது தொண்டர்கள் காரை சூழ்ந்திருந்தனர். மேலும், சிலர் கார் மீதும் ஏறினர். அப்போது, ஜெகன் மோகன் ரெட்டி காரில் எழுந்து நின்ற தொண்டர்களை சந்தித்திருந்தார்.

கட்சி தொண்டர்களின் கூட்டத்திற்கு நடுவே, கார் முன்னோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, கட்சி தொண்டர் ஒருவர் காரின் டயரில் சிக்கினார். கீழே விழுந்த அந்த நபரின் மீது கார் டயர் ஏறியது. கிழே விழுந்ததை கவனிக்காத ஜெகன் மோகன் ரெட்டியின் கார் ஓட்டுநர், அந்த நபர் மீது கார் ஏற்றியதில் அவர் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

தலை நசுங்கி பலி

இதனை அறிந்த  போலீசார் படுகாயம் அடைந்த நபரை குண்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். டைம்ஸ் ஆப் இந்தியா தகவலின்படி, உயிரிழந்தவர் வெங்கலயபாலம் கிராமத்தைச் சேர்ந்த சிங்கையா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் மூன்று நாட்களுக்கு நடந்து இருக்கிறது. தற்போது, இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது. இதற்கிடையில், இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஒய்எஸ்ஆர் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. 55 வயதான நபர் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கார் மோதி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்துக்கான காரணம் என்ன.. ஓட்டுநர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. மேலும், உயிரிழந்த சிங்கையாவின் குடும்பத்தினர் நீதி கோரியுள்ளததாகவும், விபத்து குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

Follow Us