Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

3 ஆண்டு ஜெயில் டூ ரூ.5 லட்சம் அபராதம்.. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கர்நாடக அரசு முடிவு!

Karnataka Crowd Management Bill : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆர்சிபி கொண்டாட்டத்தில் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விபத்தை அடுத்து, கூட்டத்தை கட்டுப்படுத்த கர்நாடக அரசு புதிய மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. இந்த மசோதா சட்டமாக மாறும் பட்சத்தில், நிகழ்ச்சிகளில் அசம்பாவிதங்கள் நடந்தால் மூன்று ஆண்டு சிறை மற்றும் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

3 ஆண்டு ஜெயில் டூ ரூ.5 லட்சம் அபராதம்.. கூட்ட  நெரிசலை கட்டுப்படுத்த கர்நாடக அரசு முடிவு!
கர்நாடக முதல்வர் சித்தராமையா
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 19 Jun 2025 22:30 PM IST

பெங்களூரு, ஜூன் 19 : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கூட்ட நெரிசலில் (Bengaluru Stampede) சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, கர்நாடக அரசு (Karnataka Goverment) கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான மசோதா (Crowd Management Bill) சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 2025 ஜூன் 19ஆம் தேதியான இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரிய கூட்டங்களை ஒழுங்குபடுத்துவதையும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு இதற்கான வரைவு மசோதாக குறித்து விவாதிக்கப்பட்டது. இது தொடர்பான வரைவு அறிக்கையில், கர்நாடகாவில் அரசியல் பேரணிகள் மற்றும் மாநாடுகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்துபவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தும். அதே நேரத்தில், திருவிழா, மத கொண்டாட்டங்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

3 ஆண்டு ஜெயில் டூ ரூ.5 லட்சம் அபராதம்

என்டிடிவியின் தகவலின்படி, பெரும் நிகழ்ச்சிகளை நடத்தும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே அசம்பாவிதங்களுக்கு பொறுப்பாவார்கள். நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் காவல்துறை அனுமதி பெற வேண்டும். நிகழ்ச்சிகளில் மக்களுக்கு காயம், மரணம், நெரிசலை கட்டுப்படுத்த தவறுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்தால், நிகிழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை  கடுமையான அபராதம் விதிக்கப்படும். அதோடு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும். மேலும், அசம்பாவிதிங்களுக்கான இழப்பீடுகளை தர தவறினாலும் தண்டனை இருக்கும் என வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

18 ஆண்டுகளுக்கு பிறகு, பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பை வென்றது. பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு ஐபிஎல் கோப்பை தட்டித் தூக்கியது. 18 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றால், ரசிர்கள் கொண்டாடினர். கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, 2025 ஜூன் 4ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வெற்றி கொண்டாட்டம் நடத்தப்பட்டது.

கர்நாடக அரசு எடுத்து முடிவு

இந்த கொண்டாட்த்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே லட்சக்கணக்கானர ரசிர்கள் கூடினர். இந்த வெற்றி கொண்டாட்டத்தை கர்நாடக கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்து இருந்தது. சின்னசாமி மையதானத்தில் வெளியே ஆர்சிபி வீரர்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் திரண்டனர். மைதானத்தில் 35,000 இருக்கைகள் மட்டுமே இருந்துள்ளது.

ஆனால், அந்நிகழ்ச்சிக்கு 3 லட்சம் பேர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, காத்திருந்த ரசிகர்கள் நுழைவு வாயிலை உடைத்து உள்ளே நுழைய முயன்றனர். இதனால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.  இந்த விபத்தை அடுத்து, கர்நாடக அரசு மீது விமர்சனங்கள் எழுந்தது. போதுமான திட்டமிடல் இல்லாததல் இந்த விபத்து நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த சூழலில், கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை கொண்டு வர கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.