Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குடும்பம், இசை, உடற்பயிற்சி.. இதுவே ராகுல் காந்தியின் தனிப்பட்ட உலகம்..

Rahul Gandhi: ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கை தவிர்த்து, அவரது தனிப்பட்ட வாழ்க்கை தனது குடும்பத்தை சுற்றியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஜூன் 19,2025 55 வது பிறந்தநாளை கொண்டாடிய ராகுல் காந்தி அவரது திருமண வாழ்க்கை குறித்த கேள்வி இன்னும் இருந்து வருகிறது.

குடும்பம், இசை, உடற்பயிற்சி.. இதுவே ராகுல் காந்தியின் தனிப்பட்ட உலகம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Jun 2025 09:39 AM

ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கை பற்றி நிறைய தெரிந்திருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவர் எப்படிப்பட்டவர் எதை விரும்புகிறார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. அவரது அரசியல் வாழ்க்கையை தவிர்த்து குடும்பம், அவர் வளர்க்கும் செல்லப்பிராணிகள், இசை மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றோருக்கே நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறார். ராகுல் காந்தி தனது காலைப் பொழுதை மிகவும் சீக்கிரமாக தொடங்குபவர்.

பைக் ஓட்டுவது, ஜிம் செல்வது, மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி மேற்கொள்வது இதனை சுற்றியே அவரது தனிப்பட்ட வாழ்க்கை இருக்கும் என ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 19 2025 தேதியான நேற்று ராகுல் காந்தி தனது 55 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.  ராகுல் காந்திக்கு திருமணம் நடைபெறுமா திருமணம் செய்து கொள்வாரா என்பது மக்கள் மனதில் நீங்காத கேள்வியாக உள்ளது.

ராகுல் காந்தியின் பிறந்தநாளுக்கு தலைவர்கள் வாழ்த்து:


ஜூன் 19 2025 தேதியான நேற்று ராகுல் காந்தியின் பிறந்த நாள் கொண்டாட்டப்பட்டது. அவரது பிறந்த நாளிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ராகுல் காந்தியின் உலகம் தனது தாய் சோனியா காந்தியை சுற்றி இருப்பதாக கூறுகின்றனர். அவர் தனது தாய் சோனியா காந்தி மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர் என அறியப்படுகிறது.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையின் போது, தனது தாயின் காலணியின் லேசை கட்டுவது, சோனியா காந்தியின் செருப்பை எந்த ஒரு தயக்கமும் இன்றியும் கையில் எடுத்து செல்லும் காட்சிகள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டது. 2023 ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ராகுல் காந்தி, துக்ளக் லேனில் இருக்கக்கூடிய பங்களாவை காலி செய்து டெல்லியில் உள்ள தனது தாயார் உடன் வசித்து வருகிறார்.

பின்னர் ஆகஸ்ட் மாதம் 2023 ஆம் ஆண்டு அவருக்கான எம்.பி பதவி மீண்டும் வழங்கப்பட்ட போது அவருக்கான துக்ளக் லைன் வீடு ஒதுக்கப்பட்டது. அதாவது நாடாளுமன்ற உறுப்பினருக்கான வீடு ஒதுக்கப்பட்டது. ஆனாலும் அவர் அந்த இடத்திற்கு மீண்டும் செல்லாமல் தனது தாய் சோனியா காந்தி உடனே வசித்து வருகிறார்.

ராகுலின் உணவுப்பழக்கம்:

ராகுல் காந்தி அதிக உணவுப் பிரேயர் கிடையாது. அவர் மிகவும் எளிமையான, காரமற்ற உணவையே விரும்புவார். அவர் பிற மாநிலங்களுக்கு செல்லும் பொழுது கூட அதையே பின்பற்றுவார். அதிக அளவு அவர் உடற்பயிற்சியில் நேரம் செலுத்துவதன் காரணமாக புரத சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தாலும் மிகவும் எளிமையான ஆடையுடன் வரக்கூடிய ஒருவர். ராகுல் காந்தி பெரும்பாலும் காதியில் இருந்து பெறப்பட்ட குர்தா பைஜாமாக்கலையே அணியக் கூடியவர்.

ராகுல் காந்தி எங்கே செல்வார் அவருக்கு பிடித்தமான இடம் எது என கேட்ட பொழுது அவரது உதவியாளர்களில் ஒருவர், “ ராகுல் காந்தி டெல்லியின் மல்சா மார்க்கில் உள்ள ஃபுஜியாவை குறிப்பிட்டார், அதாவது இந்த இடம் தனது தந்தை ராஜீவ் காந்தியுடன் சென்று பார்த்த இடம் என அவர் குறிப்பிட்டார். அதேபோல் டெல்லியில் உள்ள ஆந்திரா பவன் கேண்டீன் மற்றும் இத்தாலிய தூதரகத்தில் அமைந்துள்ள ஒரு உணவகத்திற்கும் அவர் அடிக்கடி செல்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் திருமண வாழ்க்கை:

இப்படி தனிப்பட்ட வாழ்க்கை அவரது குடும்பத்தை சூழ்ந்து இருக்கும் நிலையில், ராகுல் காந்தியின் திருமணம் குறித்த கேள்வி ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு இது தொடர்பாக ராகுல் காந்தி இடம் கேட்ட பொழுது, எனக்கு சரியான பெண் துணையாக வரும்பொழுது திருமணம் நடக்கும் என தெரிவித்தார். அதேபோல் 2024 ஆம் ஆண்டு இந்த கேள்வியை கேட்ட பொழுது திருமணத்தைப் பற்றி பெரிதாக எனக்கு எந்த ஒரு திட்டமும் இல்லை, ஆனால் அது நடைபெறும் பொழுது நடக்கும் என குறிப்பிட்டிருந்தார்.