போக்சோ வழக்கு – நீதிமன்றத்தில் சரணடைந்த மத்திய அமைச்சர் மகன் – என்ன நடந்தது?
Union Minister Bandi Sanjay Son Arrested : மத்திய இணை அமைச்சரும், பாஜக எம்பியுமான பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி பகிரத் சாய் 17 வயது சிறுமி ஒருவர் பகீரத் சாய் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
மத்திய இணை அமைச்சரும், பாஜக எம்பியுமான பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி பகிரத் சாய் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால கைது தடை வழங்க மறுத்த சில மணி நேரங்களிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 17 வயது சிறுமி ஒருவர் பகீரத் சாய் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல் நிலையத்தில் பவழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தில் சரணடைந்த மத்திய அமைச்சரின் மகன்
தற்போது மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன், பண்டி பகிரத் சாய் மீது போக்சோ உள்ளிட்டி பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என இந்த விவகாரம் குறித்து பண்டி சஞ்சய் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து செய்துள்ளார்.




இதையும் படிக்க : அடுத்த வருடம் முதல் ஆன்லைனில் நீட் தேர்வு.. மத்திய அமைச்சர் கொடுத்த முழு விளக்கம்!
அமைச்சரின் எக்ஸ் பதிவு
Satyameva Jayate
With utmost respect for the law and judiciary, today my son Bandi Bhageerath went before the Telangana Police through our advocates for investigation.
I have said this before too: whether it is my own son or a common citizen, everyone is equal before the law.…
— Bandi Sanjay Kumar (@bandisanjay_bjp) May 16, 2026
இது குறித்து அவதர் தனது எக்ஸ் பதிவில், என் மகனாக இருந்தாலும், சாதாரண குடிமகனாக இருந்தாலும் சட்த்தின் முன் அனைவரும் சமம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சட்டத்திற்கும் நீதித்துறைக்கும் முழு மரியாதை அளித்து என் மகன் காவல்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். என்று தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து தாம் எந்த தவறும் செய்யவில்லை என்று அவரது மகன் கூறி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே விசாரணைக்கு ஒத்துழைக்க முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க : தகிக்கும் பாலைவனத்தில் உப்பளத் தொழிலாளர்களின் துயரம்: குஜராத்தின் அவல நிலை
நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
இந்த வழக்கு தொடர்பாக தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது. அப்போது, பகீரத் சாய்க்கு இடைக்கால கைது தடை வழங்க நீதிமன்றம் மறுத்தது. பகீரத் சாய் தரப்பு வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட சிறுமியும் பகீரத் சாயும் கடந்த ஆண்டு முதல் உறவில் இருந்தனர் என்றும், அது இருவரின் சம்மதத்துடன் நடந்த உறவு என்றும் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
ஆனால், சிறுமி தரப்பு வழக்கறிஞர் இந்த ஜாமீன் மனுவை கடுமையாக எதிர்த்தார். இதையடுத்து நீதிபதி டி. மாதவி தேவி, இந்த கட்டத்தில் இடைக்கால உத்தரவு வழங்க விருப்பமில்லை என்று தெரிவித்தார்.